Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 3, 2017

விவசாயிகள் தற்கொலையில் தமிழகம்.. 7வது இடத்தில் தானே இருக்கு உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்


இந்திய அளவில் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வது குறித்து உச்ச நீதிமன்றத்தில் நடக்கும் வழக்கில் மத்திய அரசு பதில் அளித்துள்ளது.அதில்,ஆண்டுக்கு 12,000திற்கும் மேல் விவசாயிகள் இந்தியாவில் தற்கொலை செய்து

கடும் வறட்சி,வங்கிக் கடன் தொல்லை என பல்வேறு இன்னல்களில் சிக்கி தவிக்கும் இந்திய விவசாயிகள் அடிக்கடி தற்கொலை செய்துகொள்கின்றனர்.கடந்த 2013 ம் ஆண்டு முதல் ஆண்டுக்கு 12,000 க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர் என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
.
இந்திய அளவில், விவசாயிகள் தற்கொலையை தடுக்க மத்திய அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்த பொதுநல வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான மத்திய அரசின் வழக்கறிஞர் பி.எஸ்.நரசிம்மா, விவசாயிகளுக்காக மத்திய அரசு கொண்டு வந்துள்ள நலத்திட்டங்கள் குறித்த பட்டியலை வாசித்தார்.


அரசு அதிகாரிகளை கண்டித்து திருப்பூர் ஆளும் கட்சி..
மேலும் நிதி ஆயோக் மூலம் விவசாயிகளுக்கு ஒதுக்கப்படும் நிதி குறித்தும் நரசிம்மா தெரிவித்தார். அப்போது அவர், விவசாயிகளின் வருமானத்தை பெருக்க அரசு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதிக எண்ணிக்கையிலான விவசாயிகள் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளதால் எதிர்பாராதவிதமாகத் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்கள் நடக்கின்றன. மத்திய அரசு வரும் 2022 ம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானத்தை இருமடங்காக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றும் நரசிம்மா தெரிவித்தார்.
தற்கொலையில் தமிழகம் 7வது இடம்

மத்திய அரசின் வழக்கறிஞர் நரசிம்மா கோர்ட்டில் அளித்துள்ள புள்ளிவிபரத்தின்படி,சென்ற 2015 ம் ஆண்டில் மகாராஷ்டிரா மாநிலம் விவசாயிகள் தற்கொலையில் முதலிடத்தில் உள்ளது. அம்மாநிலத்தில் 4291 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் 1569 பேரும், தெலுங்கானாவில் 1400 பேரும், மத்திய பிரதேசத்தில் 1290 பேரும், சட்டீஸ்கர் மாநிலத்தில் 954 பேரும், ஆந்திராவில் 916 பேரும், தமிழகத்தில் 606 விவசாயிகளும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

கடந்த 2013ம் ஆண்டு 11,772 ஆக இருந்த விவசாயிகள் தற்கொலை எண்ணிக்கை 2014 ல் 12,360 ஆக அதிகரித்துள்ளது என்பதை புள்ளிவிவரம் வெளிப்படுத்துகிறது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.