Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 4, 2017

770 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பு கருப்பு பணம்... இந்தியாவில் ஊடுருவல்...


12 ஆண்டுகளில் 770 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான கருப்பு பணம் இந்தியாவிற்குள் ஊடுருவியுள்ளது என்று அமெரிக்க நிறுவனம் தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்காவில் செயல்பட்டு வரும் உலக பொருளாதாரத்தை கண்காணிக்கும் நிறுவனம் கருப்பு மற்றும் சட்டவிரோத பண நடமாட்டம் குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.

இதில் 2005ம் ஆண்டு முதல் 2017 ஆண்டுகளுக்கிடையே இந்தியாவிற்குள் 770 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான கருப்பு பணம் இந்தியாவிற்குள் ஊடுருவியுள்ளதாகவும், அதே காலத்தில் 165 பில்லயன் அமெரிக்க டாலர் மதிப்பிலான பணம் இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக வெளியேறியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

2014ம் ஆண்டு மட்டும் 101 பில்லியன் அமெரிக்கடாலர் மதிப்பிலான கருப்பு பணம் இந்தியாவிற்குள் ஊடுருவியதாகவும், 23 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான பணம் சட்டவிரோதமாக வெளியேறியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2014ம் ஆண்டு மட்டும் வளரும் பொருளாதார நாடுகளில் சுமார் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான பணம் ஊடுருவியுள்ளது.

இதே போல் 2015-2017 ஆண்டுகளில் நடந்த மொத்த பணபரிவர்த்தனைகளில் 3 சதவீதம் சட்டவிரோதமாக நடந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.