Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 14, 2017

மீண்டும் வடகொரியா நடத்திய ஏவுகணை சோதனை: 700 கிலோ மீட்டர் பறந்தது


வட கொரியா மீண்டும் ஏவுகணை சோதனையை நடத்தியுள்ளதாக தென் கொரியா ராணுவம் தெரிவித்துள்ளது.
வட கொரியா தொடர்ச்சியாக பல அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனைகளை நடத்தி உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தி வருகிறது.
இதற்கு அமெரிக்கா, வட கொரியா, சீனா உள்ளிட்ட உலக நாடுகள் கடும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றன.




ஆனாலும், இதை வட கொரியா காது கொடுத்து கேட்பதாக இல்லை.
இவ்வளவு கண்டனங்களுக்கு மத்தியிலும், வட கொரியா மீண்டும் ஏவுகணை சோதனையை நேற்று நடத்தியுள்ளது.
வட கொரிய தலைநகர் பியோங்யாங்கின் உள்ள குஸாங்கிலிருந்து ஏவப்பட்ட ஏவுகணை 700 கிலோ மீட்டர் தூரம் வரை பறந்துள்ளது.
இதை தென் கொரியா உறுதி செய்துள்ளது. கடந்த மாதம் வட கொரியா மேற்கொண்ட இரு ஏவுகணை சோதனைகளில், ஏவுகணைகள் ஏவப்பட்ட சில நிமிடங்களிலேயே வெடித்த நிலையில், இது 700 கிலோ மீட்டர் பறந்துள்ளது முக்கிய விடயமாகும்.
இந்த சோதனைக்கு தென் கொரியா மற்றும் ஜப்பான் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் தென் கொரிய தலைவர் மூன் ஜே-இன் இது குறித்து அவசரமாக விவாதிக்க பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தை கூட்டியுள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.