May 2, 2017
வேன் மோதி 60 ஆடுகள் பலி: ஒருவர் உயிரிழப்பு ஐயோ.... பாவம் .....
கோபிச்செட்டிபாளையம் அருகே ஆட்டு மந்தைக்குள் வேன் புகுந்ததில் 60 ஆடுகள் இறந்தன. மேய்ச்சலுக்காக ஓட்டிச்சென்ற மருதாச்சலம் என்பவரும் உயிரிழந்தார். கோவை மாவட்டம் சூளூர் அருகேயுள்ள கண்ணம்பாளையத்தை சேர்ந்தவர் நாகராஜ். இவருக்கு சொந்தமான 750 குறும்பை ஆடுகளை அதே ஊரைச் சேர்ந்த மருதாச்சலம் என்பவர் உள்ளிட்ட 4 பேர் மேய்ச்சலுக்காக கோபிச்செட்டிபாளையத்திற்கு ஓட்டி சென்றனர்.
பொடிவேரி அணை சாலையில் சென்றபோது வேகமாக வந்த வேன் ஒன்று ஆடுகள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் 60 ஆடுகள் உயிரிழந்தன. ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச்சென்ற மருதாச்சலமும் படுகாமடைந்தார். இந்த விபத்தில் படுகாயமடைந்த மருதாச்சலம், மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்திய வேன் ஓட்டுனர் ராஜா காவல்நிலையத்தில் சரணடைந்தார். விபத்து குறித்து கடத்தூர் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வேன் மோதி 60 ஆடுகள் பலி: ஒருவர் உயிரிழப்பு ஐயோ.... பாவம் .....
Reviewed by மறத்தமிழன்
on
May 02, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
May 02, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.