May 5, 2017
திண்டுக்கல் அருகே லாரி மீது அரசு பஸ் மோதல்: 6 பேர் பலி
திண்டுக்கல் மாவட்டம் சின்னலாம்பட்டி அருகே சரக்கு லாரியும் அரசுப்பேருந்தும் மோதிக்கொண்ட சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். மதுரை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் பெருமாள்கோவில்பட்டி அருகே மதுரையில் இருந்து திண்டுக்கல் சென்ற சரக்குலாரியும், அதன்பின் வந்த அரசுப்பேருந்தும் நேருக்கு நேர் மோதியது. அரசுப்பேருந்து டிரைவரின் அஜாக்கிரதை காரணமாக பேருந்து சரக்கு லாரி மீது மோதியது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 4பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 16 பேர் காயமடைந்தனர்.
காயாமடைந்தவர்களில் 2 பேர் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 6 ஆக உயர்ந்தது. மேலும் காயமடைந்தவர்கள் அனைவரும் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர்களில் 3 பேர் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக தெரிகிறது. விபத்து குறித்து அம்பாத்துரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல் அருகே லாரி மீது அரசு பஸ் மோதல்: 6 பேர் பலி
Reviewed by Admin
on
May 05, 2017
Rating: 5
Reviewed by Admin
on
May 05, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.