Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 9, 2017

பாகிஸ்தானுக்குள் புகுந்து பயங்கரவாதிகளின் புகலிடங்களை அழிப்போம்: ஈரான் எச்சரிக்கை தில்லுட - 56" எங்கே?


எல்லையில்  தாக்குதல் நடத்தும் பயங்கரவாதிகளை எதிர்த்து போராடாவிட்டால் பாகிஸ்தானுக்குள் உள்ள பயங்கரவாதிகளின் முகாம்களை அழிப்போம் என்று ஈரான் ஆயுதப்படை தலைவர் தெரிவித்துள்ளார்.கடந்த சில வாரங்களுக்கு முன் ஈரான் நாட்டைச்சேர்ந்த 10 எல்லைப் பாதுகாப்புப் படையினர் பயங்கரவாத  தாக்குதலுக்கு பலியாகினர். ஜைஷ் அல் அடில் என்ற  பயங்கரவாத  அமைப்பு பாகிஸ்தான் எல்லையிலிருந்து தாக்குதல் நடத்தியதே வீரர்கள் உயிரிழப்பு   காரணம் என்று ஈரான் கடும் கண்டனம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், ஈரான் ராணுவ மேஜர் ஜெனரல் முஹமது பக்கோரி பேசுகையில்,  “இத்தகைய செயல்கள் தொடர்வதை நாங்கள் இனியும் அனுமதிக்க முடியாது. எல்லைப்பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் இத்தகைய செயல்களை தடுத்து நிறுத்த வேண்டும். பயங்கரவாதிகளை கைது செய்து அவர்களின் முகாம்களை அழிக்க வேண்டும். பயங்கரவாதத் தாக்குதல் தொடர்ந்தால் நாங்கள் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளின் பாதுகாப்பு புகலிடங்களை தேடி அழிக்க வேண்டிவரும்” என்று எச்சரித்தார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.