May 8, 2017
பிரதமர் மோடியின் 56 இஞ்ச் மார்புக்கு இப்போது என்ன ஆயிற்று? காங்கிரஸ்
இந்திய வீரர்கள் தலை துண்டிக்கப்பட்ட விவகாரத்திற்கு எதிராக போராட்டம் நடத்திய காங்கிரஸ் பிரதமர் மோடியின் 56 இஞ்ச் மார்பு 56 மில்லி மீட்டராகிவிட்டது என விமர்சனம் செய்து உள்ளது.
ஜம்மு காஷ்மீரில் எல்லையில் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் ராணுவம் இரு இந்திய ராணுவ வீரர்களை கொன்று அவர்களுடைய தலையை துண்டித்துவிட்டது. இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் கோபத்தை எழுப்பியது. மத்திய அரசு கடும் நடவடிக்கையை கையில் எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது. இதற்கிடையே எதிர்க்கட்சியான காங்கிரஸ், முந்தைய ஆட்சி காலத்தில் நடந்த சம்பவத்திற்கு பா.ஜனதாவினர் விமர்சனம் செய்ததை எடுத்துக் கூறி மோடி அரசை விமர்சனம் செய்து வருகிறார்கள். காங்கிரஸ் தரப்பில் பிரதமர் மோடிக்கு வளையல்களை அனுப்பும் போராட்டமும் நடந்தது.
இந்திய வீரர்கள் உடல் சிதைக்கப்பட்ட சம்பவத்திற்கு எதிராக காங்கிரஸ் கட்சியின் சார்பில் கோவா மாநிலம் பனார்ஜியில் போராட்டம் நடைபெற்றது. அப்போது கோவா மாநில மகிளா காங்கிரஸ் தலைவர் சுனிதா வீரன்கார் பேசுகையில், “ பிரதமர் மோடி அவருடைய 56 இஞ்ச் மார்பு குறித்து பெருமையாக பேசுவார். இப்போது அதற்கு என்ன ஆயிற்று? இப்போது அது 56 மில்லி மீட்டராக சுருங்கிவிட்டது,” என விமர்சனம் செய்து உள்ளார். கோவா மாநில முதல்-மந்திரி மனோகர் பாரிக்கரை விமர்சனம் செய்த சுனிதா,
“இந்தியா முழுநேர பாதுகாப்பு மந்திரியை கொண்டிருக்காத நிகழ்வினால் நாங்கள் கவலை அடைந்து உள்ளோம். நாம் வைத்திருந்த பாதுகாப்பு மந்திரியும் கோவாவிற்கு ஓடி வந்துவிட்டார். நமக்கு இப்போது முழுநேர பாதுகாப்பு மந்திரி தேவையாக உள்ளது,” என பேசிஉள்ளார்.
பிரதமர் மோடியின் 56 இஞ்ச் மார்புக்கு இப்போது என்ன ஆயிற்று? காங்கிரஸ்
Reviewed by மறத்தமிழன்
on
May 08, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
May 08, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.