May 17, 2017
தமிழகம், புதுச்சேரியில் காளீஸ்வரி நிறுவனத்திற்கு சொந்தமான 54 இடங்களில் ஐடி ரெய்டு
காளீஸ்வரி எண்ணை நிறுவனத்தில் வருமான வரி சோதனைகள் நடைபெற்று வருகிறது.
புதுச்சேரி, மதுரை உட்பட காளீஸ்வரி நிறுவனங்களுக்கு சொந்தமான 54 இடங்களில், 250க்கும் மேற்பட்ட ஐடி அதிகாரிகள் ஒரே நேரத்தில் காலை முதல் வருமான வரி சோதனை நடத்தி வருகிறார்கள்.
சென்னை மயிலாப்பூரில் உள்ள உரிமையாளர் வீடு மற்றும் மதுரை, விருதுநகர், உள்ளிட்ட 54 இடங்களில் சோதனை நடந்து வருகிறது. பல ஆண்டுகளாக முறையான வருமானவரி தாக்கல் செய்யாததால் இந்த சோதனை நடந்து வருவதாக கூறப்படுகிறது. சோதனையில் நூற்றிற்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
காளீஸ்வரி நிறுவனம், சமையல் எண்ணை மார்க்கெட்டில் முக்கிய இடத்தை பிடித்த ஒரு நிறுவனம்.
தமிழகத்தில் சமீப காலங்களில் அமைச்சர்கள், அதிகாரிகள் என பல தரப்பு மட்டத்திலும் ஐடி ரெய்டுகள் நடைபெறுகின்றன. நேற்று ப.சிதம்பரம் வீடுகளில் சிபிஐ ரெய்டு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
தமிழகம், புதுச்சேரியில் காளீஸ்வரி நிறுவனத்திற்கு சொந்தமான 54 இடங்களில் ஐடி ரெய்டு
Reviewed by மறத்தமிழன்
on
May 17, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
May 17, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.