May 11, 2017
தமிழக அரசின் மணல் குவாரி விழுப்புரத்தில் தொடக்கம்... யூனிட் மணல் ரூ.525 க்கு விற்பனை
தமிழக ஆறுகளில் நடக்கும் தாறுமாறான மணல் கொள்ளையைத் தடுக்கும் வகையில் தமிழக அரசே மணல் குவாரி நடத்தும் என்று அண்மையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார். அதனடிப்படையில் விழுப்புரம் மாவட்டத்தில் முதல் மணல் குவாரியை தமிழக அரசு சார்பில் தொடங்கப்பட்டுள்ளது.
தென்பெண்ணையாற்றின் கீழக்கோண்டூரில் தொங்கப்பட்டுள்ள அரசு மணல் குவாரி குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், 'தமிழகத்தில் விழுப்புரம் மற்றும் திருச்சி மாவட்டங்களில் இருந்த 9 மணல் குவாரிகளை அண்மையில்தான் அரசு மூடியது. தனியார் மணல் எடுக்கும் கம்பெனியினர் பல நூறு அடிகள் ஆழம் வரை மணல் எடுத்து, ஆறுகளை பாலைவனமாக மாற்றிவந்தனர். இந்த நிலையில் பொதுமக்களும் அங்கங்கே போராட்டங்கள் நடத்திவந்தனர்.
மணல்கொள்ளை தமிழக அரசுக்கு தலைவலியைக் கொடுத்தது. இதனையடுத்து கொள்ளையைத் தடுக்கும் வகையில் அரசே மணல் விற்பனையை முறைப்படுத்த திட்டமிட்டது. அதனடிப்படையில் விழுப்புரம் மாவட்டம், கீழக்கோண்டூர் தென் பெண்ணையாற்றில் மணல் குவாரி அரசு அமைத்துள்ளது. அதில் ஒரு யூனிட் மணல் ரூ.525 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
நாள் ஒன்றுக்கு 250 லாரிகளுக்கு மட்டும்தான் மணல் வழங்கப்படும். காலை 7 மணி முதல்,மாலை 6 மணி வரையில்தான் மணல் இங்கே விற்கப்படும்' என்று தெரிவித்துள்ளனர்.
தமிழக அரசின் மணல் குவாரி விழுப்புரத்தில் தொடக்கம்... யூனிட் மணல் ரூ.525 க்கு விற்பனை
Reviewed by மறத்தமிழன்
on
May 11, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
May 11, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.