Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 6, 2017

மருத்துவர்களுக்கான 50% இடஒதுக்கீடு கிடையாது - உயர்நீதிமன்றம் உத்தரவு


மருத்துவ மேற்படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் மருத்துவ கவுன்சிலின் விதிமுறையை பின்பற்ற வேண்டும்:  உயர்நீதிமன்றம் உத்தரவு

 மருத்துவ மேற்படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் மருத்துவ கவுன்சிலின் விதிமுறையை பின்பற்ற வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கின் 3வது நீதிபதியான சத்திய நாராயணன் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளார்.

தமிழ்நாட்டில் மாநில அரசின் கிராமப்புற மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு எம்.டி., எம்.எஸ். போன்ற மருத்துவ பட்டமேற்படிப்பு வகுப்புகளில் 50 சதவீத இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுவந்தன.

இந்த நிலையில், இந்திய மருத்துவ கவுன்சில் முதுநிலைக் கல்வி முறைப்படுத்துதல் விதி ஒன்றை அறிமுகப்படுத்தியது. அதன்படி, முதுநிலை மருத்துவக் கல்வி வகுப்புகளுக்கும் நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டதோடு, கிராமப்புறத்தில் பணிபுரியும் மருத்துவர்களுக்கான இடஒதுக்கீடும் ரத்து செய்யப்பட்டது.

2012ஆம் ஆண்டில் இந்தச் சட்டத்திற்கு தடை விதித்த உச்ச நீதிமன்றம், 2015ஆம் ஆண்டில் அனுமதியளித்தது. அதே நேரத்தில் தொலைதூரப் பகுதிகள், மலை கிராமங்களில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு தகுதித் தேர்வில் கூடுதல் மதிப்பெண் அளித்து அவர்களுக்கு முதுகலை இடங்கள் கிடைக்க வகைசெய்யலாம் என்று கூறியது. இந்நிலையில் ராஜேஷ் வில்ஸன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் இட ஒதுக்கீடு குறித்து வழக்கு தொடர்ந்தார்.

இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி புஷ்பா சத்ய நாராயணா, "மருத்துவ பட்ட மேற்படிப்பில் 50% இடஒதுக்கீடு செல்லாது. இந்திய மருத்துவக் கவுன்சில் விதிகளின்படியே தமிழக அரசு நடக்க வேண்டும். இதில் தமிழக அரசின் விளக்கக் குறிப்பேடு பொருந்தாது'' என்று கடந்த ஏப்ரல் 17ஆம் தேதி தீர்ப்பளித்தார்.

இதை எதிர்த்து தமிழக அரசின் சார்பிலும் மருத்துவர்கள் சார்பிலும் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை நீதிபதிகள் கே.கே. சசிதரன், எஸ்.எம். சுப்பிரமணியன் அடங்கிய அமர்வு விசாரித்தது. இது தொடர்பாக வழங்கப்பட்ட தீர்ப்பில், இரு நீதிபதிகளும் மாறுப்பட்ட கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியன், இந்திய மருத்துவக் கவுன்சிலின் விதிமுறைகளின் அடிப்படையிலேயே இடங்களை ஒதுக்கீடு செய்ய வேண்டும். ஒரு நடைமுறை பல ஆண்டுகளாக இருப்பதாலேயே அதைப் பின்பற்ற வேண்டிய அவசியமில்லை என்று கூறியுள்ளார். நீதிபதி சசிதரன், முந்தைய தனி நீதிபதியின் உத்தரவை ரத்துசெய்து தீர்ப்பளித்துள்ளார்.

இதனால், இந்த வழக்கு கூடுதல் நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு அனுப்பப்பட்டது. இந்நிலையில் இன்று இந்த வழக்கில் மூன்றவது நீதிபதி சத்திய நாராயணன் வழங்கிய தீர்ப்பில் மருத்துவ மேற்படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் மருத்துவ கவுன்சிலின் விதிமுறையை பின்பற்ற வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். மருத்துவ கவுன்சில் விதிப்படி 50 சதவீத இடஒதுக்கீடு கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த தீர்ப்பு மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளதாக மருத்துவ மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.