Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 5, 2017

5 பேரின் தூக்கு தண்டனை உறுதியாகுமா? நிர்பயா பலாத்கார வழக்கில் இன்று தீர்ப்பு !!


நிர்பயா பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கின் மேல்முறையீடு விசாரணையில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கவுள்ளது. டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளுக்கு பெருநகர நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது. இந்த தீர்ப்பு டெல்லி உயர்நீதிமன்றத்திலும் உறுதி செய்யப்பட்ட நிலையில் குற்றவாளிகள் 6 பேரும் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது.

இதனை விசாரிக்கும் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, பானுமதி, அசோக் பூஷன் ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பை வழங்கவுள்ளது. இதில் 5 பேருக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட தூக்கு தண்டனை உறுதியாகுமா என்பது தெரியவரும். கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் 16-ம் தேதி இரவு தனது ஆண் நண்பருடன் பேருந்தில் பயணம் செய்த நிர்பயா பலாத்காரம் செய்யப்பட்டு பேருந்தில் இருந்து தூக்கி வீசப்பட்டார்.

டெல்லி மருத்துவமனையிலும் தொடர்ந்து சிங்கப்பூர் மருத்துவமனையிலும் சிகிச்சையளிக்கப்பட்ட போதிலும் நிர்பயா உயிழந்தார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட முகேஷ் சிங், பவன் குப்தா, வினய் ஷர்மா, அக்‌ஷய் தாகுர், ராம்சிங் ஆகிய 5 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட சிறுவன் ஒருவன் கூர்நோக்கு இல்லத்தில் சேர்க்கபட்டுள்ளான். குற்றவாளிகளில் ஒருவரான ராம் சிங் சிறையிலேயே தற்கொலை செய்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.