Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 22, 2017

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக 41வது நாளாக நெடுவாசல் போராட்டம்


ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசல் கிராமத்தில் 2ம் கட்டமாக மக்கள் 40 நாட்களாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். நேற்று நெடுவாசல் மற்றும் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்கங்களை சேர்ந்த மக்கள் திரண்டு வந்து போராட்டம் நடத்தினர். பிரதமர் மோடியின் முடிமூடி அணிந்த ஒருவரிடம் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யகோரி மனு கொடுத்து, மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். இன்று 41வது நாளாக போராட்டம் நீடிக்கிறது.

பொதுமக்கள் கூறுகையில், ‘ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்த மத்திய அரசு பிப்ரவரி 15ம் தேதி மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. ஒப்புதல் வழங்கிய நாள் முதல் நிம்மதி இழந்து தவித்து வருகிறோம். இன்னும் மத்திய, மாநில அரசுகள் எங்களை கண்டுகொள்ளவில்லை. அதனால், நாங்கள் பிரதமர் மோடியின் முகமூடி அணிந்த ஒருவரிடம் இத்திட்டத்தை ரத்து செய்யகோரி மனு அளித்து போராட்டத்தில் ஈடுபட்டோம். மத்திய, மாநில அரசுகள் இத்திட்டத்தை ரத்து செய்து எழுத்துப்பூர்வமாக அறிவிக்க வேண்டும்’ என்றனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.