தமிழகத்தில் மிகப்பெரிய மார்கெட் என்று சொல்லகூடிய கோயம்பேடு மார்கெட், சுமார் 65 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. தமிழகம் மட்டும் அல்லாமல் பிற மாநிலங்களில் இருந்தும் தினமும் காய்கறி, பழம், பூக்கள் டன் கணக்கில் 500 லாரிகளில் விற்பனைக்காக இங்கு வருகிறது.
தமிழகத்தில் மிகப்பெரிய மார்கெட் என்று சொல்லகூடிய கோயம்பேடு மார்கெட், சுமார் 65 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. தமிழகம் மட்டும் அல்லாமல் பிற மாநிலங்களில் இருந்தும் தினமும் காய்கறி, பழம், பூக்கள் டன் கணக்கில் 500 லாரிகளில் விற்பனைக்காக இங்கு வருகிறது.
னமும் பல கோடி ரூபாய் பறிமாற்றம் நடக்கும் இந்த மார்கெட்டில் விபச்சார அழகிகள் நடமாட்டம் அதிக அளவில் உள்ளது. இதற்காகவே மார்கெட்டில் ஏஜண்ட்கள் பலர் வலம் வருகின்றனர். பெரிய வியாபாரிகள் முதல் கூலி தொழிலாளர்கள் வரை அவர்கள் வசதிக்கு ஏற்ப அழகிகளை சப்ளை செய்கின்றனர்.
மார்கெட் இரவு நேரத்தில் லோடுகள் வந்து அதிகாலை விற்பனை முடிந்து காலை 10 மணிக்கு சற்று ஒய்வாக இருக்கும் அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மார்கெட்டில் பல கடைகளை இந்த பலான தொழிலுக்கு பயன்படுத்துகின்றனர்.
கூலிவேலை செய்வோர்கள் முதல் பெரிய வியாபாரிகள் வரை தங்கள் வேலையை முடிந்து விட்டு, பணத்துடன் இருக்கும் நேரம் பார்த்து இந்த விபச்சார அழகிகள் மார்கெட்டில் வலம் வந்து, அவர்களை சந்தோஷப்படுத்திவிட்டு, ரூ 500 முதல் ஆளை பொறுத்து லட்சகணக்கில் பணத்தை பிடிங்கி சென்று விடுகின்றனர்.
இரவு முழுவதும் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை அற்ப ஆசைக்காக இது போன்ற விபச்சாரிகளிடம் பணத்தை இழந்து செல்வது வாடிக்கையாக நடந்து வருகிறது.
நாளுக்கு நாள் பெருகிவரும் இந்த தொழில் நகர போலீஸார்களுக்கு தெரிந்தே நடக்கிறது. அவர்களுக்கு ஏஜண்ட்கள் மூலம் வரவேண்டிய மாமூல் வந்து விடுகிறது ஆகவே அவர்கள் கண்டு கொள்வது இல்லை.
தட்டிகேட்கவேண்டிய போலீஸாரை இது போன்று நடந்து கொண்டால் இதை தடுப்பது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக போராடும் பெண்களும் சமூக அக்கறையில் செயல்படும் இளைஞர்களும் இதுபோன்ற சமூக அவலங்களை தட்டிகேட்க முன்வரவேண்டும் என்பது பொதுமக்களின் விரும்பம்.
இதுவரை கோயம்பேட்டில் விபச்சாரம் நடைபெறுவது தொடர்பாக பத்திற்கும் குறைவான வழக்குகளையே பதிவு செய்துள்ளனர். மேலும் கல்லூரியில் படிக்கும் மாணவிகளை சில கும்பல் மூளை சலவை செய்து இந்த தொழிலுக்கு பயன்படுத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
போலீஸார் லாரிகள் டூவீலர்கள் ஆட்டோக்களில் மட்டும் சோதனையை கனகச்சிதமாக செய்துவருகின்றனர்.
கோயம்பேடு விபச்சாரம் நடந்து வருவது காவல்துறைக்கு நன்கு தெரிந்தும் கல்லாகட்டுவதால், கண்டுகொள்ளாமல் விட்டு விடுகின்றனர்.
ஆசியாவிலே பெரிய பஸ்நிலையம் கோயம்பேடு என்ற பெயர் போய், சிகப்பு விளக்கு பகுதி என பெயரை விரைவில் எடுத்து விடும் என சமூக ஆர்வலர்களும் வியாபாரிகளும் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.