கொடநாடு எஸ்டேட்டில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை சேலம், ஆத்தூரில் உள்ள நகைக் கடைகளில் கொள்ளையர்கள் விற்று விட்டதாக கூறப்படுகிறது.
கடந்த 24-ஆம் தேதி கொடநாடு எஸ்டேட்டுக்கு வந்த கொள்ளையர்கள், காவலாளி ஓம்பகதூரை கொன்று மற்றொரு காவலாளியான கிஷன் பகதூரை தாக்கிவிட்டு சென்றனர். மேலும், பங்களாவில் இருந்த பல லட்சம் மதிப்புள்ள நகைகளை திருடி சென்றனர்.
இந்நிலையில் டிஎஸ்பி பாஸ்கரன் தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படை நடத்திய விசாரணையில் 9 பேர் பிடிப்பட்டனர். காவலாளி கிருஷ்ண பகதூரிடம் பெற்ற தகவலை வைத்து கொள்ளையர்கள் குறித்த வரைப்படங்கள் தயாராகின.
இந்நிலையில் கேரள மாநிலம் பாலக்காடு, திருச்சூர், வயநாடு உள்ளிட்ட இடங்களை சேர்ந்த 9 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், எதற்காக இந்த கொலையும், கொள்ளையும் நிகழ்ந்தது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதனிடையே, எஸ்டேட்டில் , 3 சூட்கேஸ்களில் இருந்த முக்கிய ஆவணங்களும், ஜெ. எழுதி வைத்த உயில்கள், சொத்து விவரங்கள் அடங்கிய ஆவணங்கள், 3000 சவரன் நகைகள், விலை மதிப்பில்லாத கற்களும், கொள்ளையடிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், அதுகுறித்தும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் எஸ்டேட்டில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பல லட்சம் மதிப்பிலான நகைகளை கொள்ளையர்கள் சேலம், ஆத்தூரில் உள்ள நகைக்கடைகளில் விற்று விட்டதாக, போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இது குறித்து நகைக்கடை அதிபர்களுக்கு வருமானவரித்துறை அதிகாரிகள் விளக்கம் கேட்டுள்ளனர். மேலும், போலீஸாரும் விசாரணை நடத்தவுள்ளனர்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.