May 3, 2017
ரயில்வேயின் ஊழலை வெளிப்படுத்திய அதிகாரிகள் 3 பேர் பணியிடை நீக்கம். தவறான தகவல் தந்ததாக ரயில்வே விளக்கம்
ரயில்வே கேன்டீன்களுக்கு 100 கிராம் தயிர் ரூ.972-க்கு கொள்முதல் செய்யப்பட்டதாக தகவலறியும் சட்டத்தின் கீழ் தகவல் தந்த விவகாரத்தில் அதிகாரிகள் 3 பேரை ரயில்வே நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்துள்ளது. ரயில்வே கேன்டீன்களில் விற்பனை செய்யப்படும் பொருட்களின் விலை உயர்ந்து வருவது தொடர்பாக அஜய் போஸ் என்பவர் தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ் மத்திய ரயில்வேயிடம் கேள்வியெழுப்பி இருந்தார்.
இதற்கு மத்திய ரயில்வே அளித்த பதிலில் 100 கிராம் தயிர் ரூ.972, 1 லிட்டர் சமையல் எண்ணெய் ரூ.1242-க்கும், 1 கிலோ உப்பு ரூ.40-க்கும் வாங்கப்படுவதாக கூறியிருந்தது. இது நாடு முழுவதும் கடும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ் கொடுக்கப்பட்ட விவரங்களில் தட்டச்சி பிழை இருக்கலாம் என ரயில்வே நிர்வாகம் கூறியிருந்தது. இதனிடையே ரயில்வே உதவி வணிக மேலாளரை பணியிட மாற்றம் செய்த ரயில்வே நிர்வாகம், குடோன் கணக்கு பதிவாளர், சமயல் ஆய்வாளர், தகவலறியும் சட்டத்தின் கீழ் தவறான தகவல் தந்த அதிகாரி ஆகிய 3 பேரை பணியிடை நீக்கம் செய்துள்ளது. மேலும் இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ரயில்வேயின் ஊழலை வெளிப்படுத்திய அதிகாரிகள் 3 பேர் பணியிடை நீக்கம். தவறான தகவல் தந்ததாக ரயில்வே விளக்கம்
Reviewed by மறத்தமிழன்
on
May 03, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
May 03, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.