May 15, 2017
பிளஸ்2 படித்தவர்களுக்கு விமான படையில் பணி காத்திருக்கு ! வாய்ப்பை தவற விடாதீர்கள்!
திருச்சியில், வரும் 20 மற்றும் 22ம் தேதி, விமானப் படைக்கு ஆள் தேர்வு நடைபெற உள்ளது. திருச்சி, அண்ணா விளையாட்டரங்கில், தேர்வு நடைபெறும். இதில், 1997 ஜூலை, 7ல் இருந்து 2000 டிச., 20க்குள் பிறந்தவர்கள்பங்கேற்கலாம்.
பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குறைந்தது, 50 சதவீதம் மதிப்பெண்கள் வேண்டும். ஆங்கிலத்திலும், 50 சதவீதம் மதிப்பெண் எடுத்திருக்க வேண்டும்.
தேர்வுக்கு வருவோர் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழை எடுத்து வர வேண்டும்.
நகலில் சான்றொப்பமிட்டு கொண்டு வர வேண்டும். மே2௦ ல் நடைபெறும் தேர்வில், மதுரை, திருநெல்வேலி, விருதுநகர், துாத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, கிருஷ்ணகிரி, திருச்சி, விழுப்புரம், சேலம், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, கடலுார், திருவாரூர், கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களும், புதுச்சேரியைச் சேர்ந்தவர்களும் பங்கேற்கலாம்.
வரும் 22ல் நடைபெறும் தேர்வில், வேலுார், கன்னியாகுமரி, தேனி, தஞ்சாவூர், திருவண்ணாமலை, சென்னை, திருவள்ளூர், திண்டுக்கல், தர்மபுரி, கோவை, காஞ்சிபுரம், திருப்பூர், நாமக்கல், ஈரோடு, அரியலுார், நீலகிரி, பெரம்பலுார் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் பங்கேற்கலாம்.மேலும் விபரங்களுக்கு, www.airmenselection.gov.in இணையதளத்தை பார்வையிடலாம்.
பிளஸ்2 படித்தவர்களுக்கு விமான படையில் பணி காத்திருக்கு ! வாய்ப்பை தவற விடாதீர்கள்!
Reviewed by மறத்தமிழன்
on
May 15, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
May 15, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.