May 12, 2017
பிளஸ்-2 தேர்வு முடிவுகள்: வழக்கம் போல் மாணவர்களை முந்திச்சென்ற மாணவிகள்
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 9 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் எழுதிய பிளஸ்- 2 தேர்வின் முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது. இந்த ஆண்டு முதல் புதிய நடைமுறை பின்பற்றப்பட்டது.
அதாவது, இதுவரை மாணவர்களின் ‘‘ரேங்க்’’ பட்டியல் வெளியிடப்பட்டு வந்தது. மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில், மாநில அளவில் முதல் இடம் பெற்றவர்கள், இரண்டாம் இடம் பெற்றவர்கள், மூன்றாம் இடம் பெற்றவர்களின் பட்டியல் வெளியிடப்படும். மேலும் பாட வாரியாக முதல் மூன்று இடங்களை பெற்றவர்களின் பெயர் விவரங்களும் அறிவிக்கப்படும். ஆனால் இந்த ஆண்டு முதல் ரேங்க் பட்டியல் வெளியிடப்படப்படவில்லை.
தேர்ச்சி விகிதத்தில் வழக்கம் போல் மாணவர்களைவிட மாணவிகளே அதிக தேர்ச்சி விகிதம் பெற்றுள்ளனர். 94.5 சதவீதம் மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 89.3 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
தேர்வு எழுதிய மாணவிகள் எண்ணிக்கை - 477930. இவர்களில் 94.5 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வு எழுதிய 415331 மாணவர்களில் 89.3 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்களை விட மாணவிகள் 5.2 சதவீதம் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பிளஸ்-2 தேர்வு முடிவுகள்: வழக்கம் போல் மாணவர்களை முந்திச்சென்ற மாணவிகள்
Reviewed by மறத்தமிழன்
on
May 12, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
May 12, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.