Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 11, 2017

+2 பொதுத் தேர்வு முடிவுகள் எஸ்எம்எஸ்-ஸில் அனுப்பப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்


திட்டமிட்டபடி மே 12ம் தேதி பிளஸ் 2 தேர்வு முடிவுகள்  அறிவிக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

சென்னை  தலைமைச் செயலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை, முன்பு திட்டமிட்டபடியே, பிளஸ் 2 தேர்வுகள் வெளியாகும்.

தேர்வெழுதிய 9 லட்சம் மாணவர்களுக்கும் தேர்வு முடிவுகள் எஸ்எம்எஸ் மூலம் அனுப்பப்படும். மாணவர்களின் பெற்றோர் செல்போன் எண்ணிற்கு ப்ளஸ் டூ தேர்வு முடிவுகள் அனுப்பப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இணையதளத்தில் வெளியிடப்படும் தேர்வு முடிவுகளில் தாமதம் இருக்காது என்றும், நீட் தேர்வுக்காக பாடத் திட்டத்தை மாற்றுவது குறித்து பரிசீலிக்கப்படும் என்றும், தமிழக அரசு சார்பில் நீட் தேர்வுக்கு பயிற்சி அளிப்பது குறித்தும் விரைவில் முடிவு செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.