Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 4, 2017

‘‘பெண்கள் மொபைலில் பேசினால் ரூ.21,000, மது விற்றால் ரூ.1.11 லட்சம்’’ கிராம பஞ்சாயத்தினர் விசித்திர


உத்தரப்பிரதேச மாநிலம், மதுரா மாவட்டத்தில் உள்ள மடோரா கிராம பஞ்சாயத்தில் தவறு செய்பவர்களை தண்டிக்கவும், பெண்களுக்கு எதிரான தவறுகள் நேராமல் தவிர்க்கவும் விசித்திர தண்டனைகளை அறிவித்துள்ளது.
தவறு செய்பவர்களை தண்டனையிலிருந்து தப்பிக்காமலும், குற்றவாளிகளுக்கு மிகப்பெரிய தண்டனையை சுமத்துவதன் மூலம் குற்ற விகிதத்தை குறைக்கவும் விசித்திரமான ஒரு வழியைக் கண்டிருக்கிறது.
அதன் அடிப்படையில், தெருவில் நடக்கும்போது மொபைல் போன்களில் பேசும் பெண்கள் மீது அபராதம்  ரூ.21,000 வசூலிக்கும்படி பஞ்சாயத்து உறுப்பினர்கள் முடிவு செய்துள்ளனர். ஏனெனில் அது பெண்களுக்கு எதிரான குற்றத்தை குறைக்கவும், இது பெண்களிடையே உற்சாகத்தை ஊக்குவிக்கும் வகையிலும் அமைகிறது.
இதுமட்டுமல்லாமல், மாட்டுக் கொட்டகையிலோ அல்லது மாட்டுத் திருட்டுகளிலோ ஈடுபடுவோருக்கு ரூ.2 லட்சம் ரூபாயும், மதுபானம் விற்பனை செய்தால் ரூ.1.11 லட்சமும் அபராதம் கொடுக்க வேண்டும் என்று விசித்திர தண்டனைகளை மடோரா கிராமத்தினர் அதிரடியாக அறிவித்துள்ளனர்.
அபராதம் செலுத்த முடியாத நிலையில் இருப்பவர்களின் சொத்துக்களை விற்று அபராதம் தொகை வசூலிக்கப்படும் எனவும் பஞ்சாயத்து கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த தண்டனைகளால் அந்த கிராமத்தினர் நிம்மதி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.