May 10, 2017
நாடு முழுவதும் உள்ள விவசாயிகளை திரட்டி மே 21ம் தேதி பிரதமர் அலுவலகம் முற்றுகை: அய்யாக்கண்ணு அறிவிப்பு
பயிர்க்காப்பீட்டு திட்டத்தில் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு தருவதில்லை என அய்யாக்கண்ணு குற்றம் சாட்டியுள்ளார். தமிழக முதல்வர் பழனிசாமியை தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அய்யாக்கண்ணு இன்று சந்தித்து பேசினார். சென்னை க்ரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் அவரை சந்தித்த அய்யாக்கண்ணு, விவசாயிகள் பிரச்னையை தீர்க்கும்படி கோரிக்கை விடுத்துள்ளார். முதல்வரை சந்தித்த பின் செய்தியாளர்களை சந்தித்த அய்யாக்கண்ணு பயிர்க்காப்பீட்டு திட்டத்தில் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு தருவதில்லை என குற்றம் சாட்டினார்.
இதுகுறித்து அய்யாக்கண்ணு மேலும் கூறியதாவது: ஏரி, குளங்களை விவசாயிகளே தூர்வார முதல்வரிடம் வலியுறுத்தியுள்ளோம். விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக முதலமைச்சர் உறுதி அளித்துள்ளார். விவசாயிகளுக்கு பலன் கிடைக்கவில்லை என்றால் அடுத்த போராட்டம் குறித்து டெல்லியில் முடிவு செய்யப்படும். விவசாயிகளின் கோரிக்கைகளை வலியுறுத்தி மே 18-ம் தேதி மீண்டும் டெல்லியில் போராட்டம் நடத்தப்படும். மேலும் நாடுமுழுவதும் உள்ள விவசாயிகளை திரட்டி மே 21ம் தேதி டெல்லியில் கூட்டம் நடத்தி நாடாளுமன்றத்தையோ பிரதமர் அலுவலகத்தையோ முற்றுகையிடுவது குறித்து முடிவு எடுக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.
நாடு முழுவதும் உள்ள விவசாயிகளை திரட்டி மே 21ம் தேதி பிரதமர் அலுவலகம் முற்றுகை: அய்யாக்கண்ணு அறிவிப்பு
Reviewed by மறத்தமிழன்
on
May 10, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
May 10, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.