Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 31, 2017

இளவரசி டயானா மரணம்! 20 வருடங்களுக்கு பிறகு வெளிவந்த உண்மைகள்!


பிரிட்டன் இளவரசி டயானா கடந்த 1997ம் ஆண்டு பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் டோடி பேய்டுடன் காரில் பயணம் செய்த போது ஏற்பட்ட விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்நிலையில் டயானா பயணித்த Mercedes-Benz S280 கார் உபயோகப்படுத்தவே தகுதியில்லாத கார் என முன்னரே எச்சரிக்கப்பட்டுள்ளது தற்போது தெரியவந்துள்ளது. இந்த காரை ஏற்கனவே பலர் வைத்திருந்த நிலையில், டோடியின் தந்தை அதை வாங்கியுள்ளார்.


இதுகுறித்து பாரீஸ் புகைப்பட கலைஞர் ஒருவர் கூறுகையில், அந்த கார் 1997ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் திருட்டு போனது. அதை திருடியவன் காரோடு விபத்தில் சிக்க கார் கடுமையான பாதிப்படைந்தது.

அதை மீண்டும் உபயோகப்படுத்தவே முடியாது என்ற நிலை இருந்த போது அந்த காரை மீண்டும் புதுப்பித்தார்கள் என கூறியுள்ளார். மேலும், டயானா இறப்பதற்கு முன்னர் அவர் தங்கியிருந்த ஹோட்டலில் என் நண்பர் கரீம் என்பவர் கார் ஓட்டுனராக இருந்தார்.

அப்போது, Mercedes-Benz S280 காரை ஓட்டி பார்த்த அவர் இது சாலையில் இயக்ககூடிய நிலையில் இல்லை. மேலும், 30 கி.மீட்டர் வேகத்துக்கு மேல் இதை இயக்கினால் நிச்சயம் ஆபத்தை விளைவிக்கும் என ஹோட்டல் மேனேஜரிடம் எச்சரிக்கை செய்துள்ளார்.

இதையெல்லாம் மீறி டயானா அந்த காரில் அதிவேகமாக பயணித்ததே விபத்துக்கு காரணம் என தெரிவித்துள்ளார்.

ஆனால் பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் போலீஸ் டயானாவின் கார் விபத்தில் தான் சிக்கியது எனவும், இதில் சதி ஏதும் இல்லை எனவும் அப்போதே அறிக்கை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.