May 3, 2017
ஐசிசி டி20 கிரிக்கெட் தரவரிசை.. பாகிஸ்தானுக்கு அடுத்த இடத்திற்கு தள்ளப்பட்டது இந்திய அணி!
உலக அளவிலான டி 20 கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று விளையாடும் அணிகளின் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.அதில் இந்தியாவுக்கு நான்காவது இடம் கிடைத்துள்ளது.
உலக அளவிலான இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் அணிகளின் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.முதல் இடத்தை நியூசிலாந்து பிடித்துள்ளது.இந்தியா நான்காவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இன்று டி 20 கிரிக்கெட் அணிகளின் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் நியூசிலாந்து முதல் இடத்தையும்,இரண்டாவது இடத்தை இங்கிலாந்தும்,மூன்றாவது இடத்தை பாகிஸ்தானும், நான்காவது இடத்தை இந்தியாவும் பிடித்துள்ளன என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இன்று ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான அணிகள் தரவரிசையையும் வெளியிட்டுள்ளது. இந்த தரவரிசைக்கான புள்ளிகள் 2014-ம் ஆண்டு மே மாதத்திலும் இருந்தும், 2016-ம் ஆண்டு மே மாதத்தில் இருந்தும் கணக்கிடப்பட்டுள்ளது. 2014-ம் ஆண்டு மே மாதத்தில் இருந்து 25 சதவீத வெயிட்டேஜ், 2016 மே மாதத்தில் இருந்து 100 சதவீத வெயிட்டேஜ் முறையில் புள்ளிகள் கொடுக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் தென்ஆப்பிரிக்கா நான்கு புள்ளிகள் அதிகம் பெற்று 123 புள்ளிகளுடன் முதல் இடத்தில் நீடிக்கிறது. ஆஸ்திரேலியா புள்ளிகளை இழக்காமலும், பெறாமலும் 118 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளது. இந்தியா 5 புள்ளிகள் அதிகம் பெற்று 117 புள்ளிகளுடன் 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.. நியூசிலாந்து 2 புள்ளிகள் பெற்று 115 புள்ளிகளுடன் 4-வது இடத்திற்கும் சரிந்துள்ளது.
டி 20 போட்டிகளின் அணிகள் தரவரிசை
1. நியூசிலாந்து -125 புள்ளிகள்
2.இங்கிலாந்து - 121
3.பாகிஸ்தான் - 121
4.இந்தியா - 118
5.தென்னாப்பிரிக்கா- 111
6. ஆஸ்திரேலியா -110
7.மேற்கிந்திய தீவுகள் -109
8. இலங்கை - 95
9. ஆப்கானிஸ்தான் -90
10.பங்களாதேஷ் -78
11.ஸ்காட்லாந்து - 67
12.ஜிம்பாப்வே -65
13.ஐக்கிய அரபு நாடுகள் -52
14. நெதர்லாந்து - 49
15. ஹாங்காங் -46
16. பப்புவா நியூ கினியா -39
17. ஓமன் -38
18.அயர்லாந்து -36
ஐசிசி டி20 கிரிக்கெட் தரவரிசை.. பாகிஸ்தானுக்கு அடுத்த இடத்திற்கு தள்ளப்பட்டது இந்திய அணி!
Reviewed by மறத்தமிழன்
on
May 03, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
May 03, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.