Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 11, 2017

வாட்ஸ் அப் மூலம் வீடியோ காலிங் செய்வதில் இந்தியா முதலிடம்: 20 கோடி இந்தியர்கள் பயன்படுத்துவதாக தகவல்


வாட்ஸ் அப் மூலம் வீடியோ கால் செய்வதில், இந்தியா முதலிடத்தில் இருப்பதாக வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்துள்ளது. வாட்ஸ் அப் மூலம் வீடியோ கால் செய்யும் வசதியை கடந்த ஆண்டு நவம்பரில், வாட்ஸ் அப் நிறுவனம் அறிமுகப்படுத்தியது. இதன்மூலம், உலகம் முழுவதும் நாளொன்றுக்கு 34 கோடி நிமிடத்துக்கு வீடியோ கால் செய்யப்படுவதாக கூறியுள்ள அந்நிறுவனம், இதில் இந்தியர்கள் 5 கோடி நிமிடத்தை பயன்படுத்துவதாக தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் 120 கோடி பேர் வாட்ஸ் அப்பை பயன்படுத்துவதாகவும், இதில் இந்தியர்கள் 20 கோடி பேர் என்றும் அந்த நிறுவனம் கூறியுள்ளது. வீடியோ காலிங் வசதி இந்திய மக்களுக்கு மிகவும் முக்கியமான தேவை என்று கூறியுள்ள வாட்ஸ் அப் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஜன் கோயும், இதை அறிமுகப்படுத்தியதன் மூலம் தங்களது நிறுவனம் பெருமை கொள்வதாகவும் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.