யோகா குரு பாபா ராம்தேவ் நிறுவனமான பதஞ்சலி நடப்பு நிதி ஆண்டில் வருவாயை ரூ.20,000 கோடியாக அதிகரிக்க இலக்கு நிர்ணயித்துள்ளது. நாடு முழுவதும் சங்கிலித் தொடர் உணவகங்களை அமைக்கவும் அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து ராம்தேவ் கூறியதாவது:
சென்ற 2016-17 நிதி ஆண்டில் பதஞ்சலி நிறுவனத்தின் வருவாய் ரூ.10,561 கோடியாக இருந்தது. இதனை, நடப்பு 2017-18-ஆம் நிதி ஆண்டில் இரண்டு மடங்கு அதிகரித்து ரூ.20,000 கோடியாக்க இலக்கு நிர்ணயித்துள்ளோம். அதற்காக, நாடு முழுவதும் தற்போதுள்ள 6,000 விநியோகத் தெடார்பு மையங்களின் எண்ணிக்கையை 12,000-ஆக உயர்த்தவுள்ளோம்.
அடுத்த ஆண்டில் சந்தையில் பல்வேறு பொருள்கள் பிரிவில் பதஞ்சலி நிறுவனம் முதலிடத்தைப் பிடிக்கும். ஒவ்வொரு ஆண்டும் நிறுவனத்தின் லாபம் 100 சதவீதம் அளவுக்கு வளர்ச்சி கண்டு வருகிறது.
புது தில்லி அருகே நொய்டா, நாகபுரி, இந்தூர் உள்ளிட்ட பல நகரங்களில் மெகா உற்பத்தி ஆலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக, தற்போது ரூ.35,000 கோடியாக உள்ள அவற்றின் உற்பத்தி திறன் ரூ.60,000 கோடி அளவுக்கு வளர்ச்சி காணும்.
நடப்பு ஆண்டில் நறுமணப் பொருள்கள், பருப்பு வகைகள், தாவர எண்ணெய், பிஸ்கட், சாக்லெட், ஜூஸ் உள்ளிட்ட பிரிவுகளில் அதிக கவனம் செலுத்தவுள்ளோம்.
பதஞ்சலி நிறுவனத்தின் 99 சதவீத தயாரிப்புகள் சொந்த ஆலையில் தயாரிக்கப்படுபவை. எனவே, வெளியில் இருந்து பொருள்களைக் கொள்முதல் (அவுட்சோர்ஸிங்) செய்து பதஞ்சலி நிறுவனம் விற்பனை செய்து வருவதாக பரவும் வதந்திகளை வாடிக்கையாளர்கள் நம்ப வேண்டாம்.விரைவில் பதஞ்சலி பிராண்டில் நாடு முழுவதும் சங்கிலித் தொடர் உணவகங்கள் அமைக்கப்பட உள்ளன. அடுத்த நிதி ஆண்டு முதல் ஏற்றுமதியையும் பெரிய அளவில் தொடங்க உள்ளோம் என்றார் அவர்.
இந்திய ராணுவ கான்டீன்களில் இவரது பதஞ்சலி நிருவன தயாரிப்புகள் இந்திய ராணுவத்தினரால் தடை செய்யப்பட்டது குறிப்பிட்ட தக்கது .




No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.