May 1, 2017
ராஜீவ் காந்தி கொலை வழக்கு: 17 வருடங்களாக நடைபெறும் விசாரணை எப்போது முடியும் உச்சநீதிமன்றம் கேள்வி
ராஜீவ் காந்தி கொலை தொடர்பாக பேரறிவாளன் தொடர்ந்த வழக்கில் 4 வாரத்தில் பதிலளிக்க மத்திய புலனாய்வு துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜூவ் காந்தி கொலை வழக்கில் வெளிநாட்டில் வசிப்போருக்கு எதிராக தொரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளதை சுட்டிக்காட்டி பேரறிவாளன் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 17 ஆண்டுகளுக்கு முன்பு விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன், பொட்டுஅம்மன் மீதான உள்ளிட்டோர் மீது சிபிஐ தொடர்ந்த வழக்கில் முன்றே்றம் இல்லை என்று பேரறிவாளன் குறிப்பிட்டுள்ளார். மேலும் வழக்கின் தற்போதைய நிலை முன்னேற்றம் குறித்து சிபிஐ பதிலளிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
இந்த வழக்கு நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அமரேந்திர சரணிடம் நீதிபதிகள் சரமாரி கேள்வி எழுப்பினர். 17 வருடங்களாக ஒரு வழக்கில் விசாரணை நடைபெறுவதாக கூறுவதை ஏற்க முடியாது என்று தெரிவித்தார்கள். வெளிநாட்டினரை கண்டுபிடிக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த சிபிஐ வழக்கறிஞர் குற்றம்சாட்டப்பட்டவர்கள் வெளிநாட்டில் இருப்பதால் அவர்களை தேடி பிடிப்பதில் சிக்கல் உள்ளதாக கூறினார். இதனையடுத்து கால நிர்ணயம் இல்லாமல் விசாரணை நடத்தி வருவது அதிர்ச்சி அளிப்பதாக தெரிவித்த நீதிபதிகள் சிபிஐயின் இயலாமையை வெளிப்படுத்துவதாக கூறினர். எனவே 4 வாரத்தில் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 16-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கு: 17 வருடங்களாக நடைபெறும் விசாரணை எப்போது முடியும் உச்சநீதிமன்றம் கேள்வி
Reviewed by மறத்தமிழன்
on
May 01, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
May 01, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.