Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 21, 2017

தடையை மீறுவதாக மே 17 இயக்கம் அறிவிப்பு- மெரினாவில் 500க்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு!


போலீஸாரின் கெடுபிடியால் விடுமுறை நாளையொட்டி கடற்கரைக்கு வந்த பொதுமக்கள் பெரும் அவதியடைந்துள்ளனர்.

 போலீஸாரின் கெடுபிடியால் விடுமுறை நாளையொட்டி கடற்கரைக்கு வந்த பொதுமக்கள் பெரும் அவதியடைந்துள்ளனர். உழைப்பாளர் சிலை முதல் கண்ணகி சிலை வரை உள்ள சர்வீஸ் சாலையில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதால் சுட்டெரிக்கும் வெயிலுக்கு இதமாக காற்று வாங்க வந்தவர்கள் திரும்பிச்செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு மே 17 இயக்கம் அழைப்பு விடுத்திருந்தது. போலீஸ் அனுமதியை மீறி மே 17 இயக்கம் நினைவேந்தல் கூட்டம் நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


அனுமதியின்றி மெரினாவில் கூடினால் கைது செய்வோம் என காவல்துறை ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில் மே 17 இயக்கத்தின் அழைப்பால் மக்கள் சென்னை மெரினா கடற்கரையில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

மெரினா கடற்கரையில் சர்வீஸ் சாலையில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. உழைப்பாளர் சிலை முதல் கண்ணகி சிலை வரை உள்ள சர்வீஸ் சாலையில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனால் பொதுமக்கள் பலர் நீண்ட தூரம் நடந்து செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டனர். பலர் கடற்கரைக்கு செல்ல முடியாமல் திரும்பிச்சென்றனர்.

மெரினாவில் 500க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு பதற்றம் எற்பட்டுள்ளது. திடீரென போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.