Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 3, 2017

ஃபேஸ்புக் நட்பால் 13 வயது சிறுமிக்கு நடந்த கொடுமை!


ஃபேஸ்புக்மூலம் நட்பாகப் பழகிய சிறுமியை, காதலிப்பதுபோல நடித்து, வாலிபர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூரில், எட்டாம் வகுப்பு படித்துவந்த 13 வயது சிறுமிக்கும் அதே ஊரைச் சேர்ந்த 21 வயது வாலிபருக்கும் ஃபேஸ்புக்மூலம் பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் அந்த நட்பு காதலாக மாறிய நிலையில், கடந்த 19-ஆம் தேதி தனது காதலனுடன் வீட்டைவிட்டு வெளியேறி இருக்கிறார் அந்தச் சிறுமி. மகள் மாயமானதுகுறித்து பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில், திருப்பூர் போலீஸார் சிறுமியைத் தேடி வந்தனர்.
இந்த நிலையில், சிறுமியின் ஒரு பவுன் நகையை விற்று சென்னைக்குச் சென்று சுற்றிப் பார்த்துவிட்டு, புதுச்சேரி பேருந்து நிலையம் அருகில் உள்ள ஒரு லாட்ஜில் இருவரும் அறை எடுத்துத் தங்கியிருக்கிறார்கள். அங்கு, அந்தச் சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்த அந்த வாலிபர், அங்கிருந்து தப்பி திருப்பூருக்குச் சென்றிருக்கிறார்.
அறையில் தனியாக அழுதுகொண்டிருந்த சிறுமியை லாட்ஜ் உரிமையாளர் பிரபாகரனும் பாலியல் பலாத்காரம்செய்ய முயன்றுள்ளார். அவரிடம் இருந்து தப்பித்து திருப்பூருக்கு வந்த சிறுமி, தனது பெற்றோர்களிடம் நடந்தவற்றை அழுதுகொண்டே தெரிவித்திருக்கிறார். இதைத் தொடர்ந்து, திருப்பூரில் பதுங்கியிருந்த அந்த வாலிபரை கைதுசெய்த போலீஸார், தலைமறைவான புதுச்சேரி லாட்ஜ் உரிமையாளர் பிரபாகரனைத் தேடிவருகின்றனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.