Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 15, 2017

நம்பமுடியவில்லை..13 வயதில் 6 குழந்தைகள்..! பழங்குடியின சிறுமிகளிடம் நடக்கும் கொடூரம்..!


ஜார்க்கண்ட் மாநிலம், கும்ஹா மற்றும் லோகர்தாகா மாவட்டங்களில் பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அவர்களின் வறுமையை பயன்படுத்தி புரோக்கர்கள் டில்லியில் நல்ல வேலை வாங்கித்தருகிறேன் என்று கூறி பெற்றோர்களிடம் கொஞ்சம் பணத்தை கொடுத்துவிட்டு 8வயது முதல் 15 வயது வரையிலான சிறுமிகளை டில்லிக்கு அழைத்து வருகின்றனர்.
அவர்களில் சிறு வயதாக உள்ளவர்களை தெரிந்த வீடுகளில் வீட்டு வேலைகளுக்கு சேர்த்துவிட்டு புரோக்கர்களின் மேற்பார்வையிலேயே வைத்துக்கொள்வார்கள்.
இதில் 13 வயதான புல்மானி( பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற சிறுமியை வாடகைத்தாயாக பயன்படுத்தி 6 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளாராம். நெஞ்சமே வெடித்துவிடும் போல் உள்ளது.
அந்த சிறுமி இதுகுறித்து கூறும்போது, டில்லியில் வேலை வாங்கித்தருகிறேன் என்று என்னை ஒருவர் அழைத்து வந்தார். கொஞ்ச நாள் ஒரு வீட்டில் வீட்டு வேலைகள் செய்து வந்தேன் பின்னர் எனக்கு ஒன்றும் புரியவில்லை. ஆனால் குழந்தை பெற்றெடுத்தேன். இதேபோல 6 குழந்தைகளை பெற்றுக்கொடுத்துள்ளேன்.
அவர்களுக்கு என் உடல் நலம் பற்றியெல்லாம் கவலை இல்லை. அவர்களைப் பொறுத்த வரை நான் பணம் காய்க்கும் மெஷின். அவ்வளவு தான். இப்படி குழந்தைகளை பெரிய தொகைக்கு விற்பனை செய்கிறார்கள் என்பது மட்டும் தெரிகிறது என்றார் கண்ணீருடன்.
இதேபோல 8 வயதில் கடத்தி வரப்பட்ட பழங்குடியின சிறுமி ஆலக்சிங் 10 குழந்தைகளை பெற்றுள்ளாராம். இதை நம்ப முடிகிறதா? புரோக்கர்கள் இந்த சிறுமிகளை கடத்தி வந்து குழந்தைகளை சர்வதேச கடத்தல்காரர்களிடம் லட்சக்கணக்கான ரூபாய்க்கு விற்பனை செய்கிறார்கள்.
இதை சக்தி வாஹிணி என்ற தொண்டு நிறுவனம் கண்டுபிடித்து போலீசில் புகார் அளித்து சிறுமிகளை மீட்டுள்ளது. ஜார்க்கண்ட் மற்றும் பீகார் போன்ற மாநிலங்களில் இருந்து சென்ற 80ஆயிரம் சிறுமிகள் இதைப்போல மீட்கப்பட்டுள்ளார்கள்.
குழந்தைகள் பாதுகாப்புச்சட்டத்தின்படி எவ்வளவு கட்டுப்பாடுகள் இருந்தாலும் இன்னும் சிறுமிகளை இவ்வாறு கடத்தி பாலியல் தொழில் மற்றும் வாடகைத்தாய் போன்ற குற்றங்களுக்கு பயன்படுத்துவதும் தொடரத்தான் செய்கிறது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.