May 3, 2017
ஒரு கிலோ எண்ணெய் ரூ.1241, 100 கிராம் தயிர் ரூ.972 – அடப்பாவிங்களா? அம்பலமான ரயில்வே ஊழல் !
மத்திய ரயில்வேயில் இயங்கும் சமையல் பிரிவு சுத்திகரிக்கப்பட்ட 1 லிட்டர் சமையல் எண்ணெயை ரூ.1241-க்கும், 100 கிராம் தயிரை ரூ.972க்கும் வாங்கியுள்ளது கேட்போரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
இதுபோல ஏராளமான சமையல் பொருட்களை அவற்றின் உச்சகட்ட விலையை விடப் பல மடங்கு அதிகமாக வாங்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதுதொடர்பான விவரங்கள் சமூக ஆர்வலர் ஒருவர் வெளியிட்ட ஆர்டிஐ மூலம் அம்பலமாகியுள்ளது.
இதுகுறித்து, பேசிய அஜய் போஸ் என்ற சமூக ஆர்வலர் , ”ரயில்வே சமையல் பிரிவு, என்னென்ன சமையல் பொருட்களை எவ்வளவு தொகைக்கு வாங்கியுள்ளது என்று ஜூலை 2016-ல் தகவல் உரிமைச் சட்டத்தின் மூலம் கேட்டிருந்தேன். ஆனால், ரயில்வே நிர்வாகம் எனக்கு பதிலளிக்க மறுத்துவிட்டது. இதனை தொடர்ந்து நான் மேல்முறையீடு செய்தேன். மேல்முறையீட்டு அதிகாரி 15 நாட்களுக்குள் அனைத்து தகவல்களையும் எனக்கு தெரிவிக்க உத்தரவிட்டிருந்தார். ஆனால் பல மாதங்கள் ஆகியும் எந்த பதிலும் வரவில்லை.
இதனை தொடர்ந்து இரண்டாவது முறையாக முறையீடு செய்தேன். அப்போது ரயில்வே நிர்வாகம் எனக்கு அளித்த தகவல்கள் என்னை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதில் ரூ.25 மதிப்புள்ள 100 கிராம் தயிர், ரூ.972-க்கு வாங்கப்பட்டதாகவும், அதேபோல அனைத்து சமையல் பொருட்களுமே விதிக்கப்பட்டிருந்த விலையை விட பல மடங்கு அதிகமாக வாங்கப்பட்டிருந்தது.
அந்த சமையல் பொருட்கள் அனைத்தும் ரயில்வே கேட்டரிங் துறையால் வாங்கப்பட்டு சமையல் கிடங்கு, ஐஆர்சிடிசி மக்கள் உணவகங்ககள், ரயில்வே சமையல் அறைகளுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளன.
எலும்புத் துண்டுடன் கூடிய சிக்கன், துவரம்பருப்பு, கடலைப் பருப்பு, பாசிப்பருப்பு உள்ளிட்டவையும் மிக அதிக விலை கொடுத்து வாங்கப்பட்டுள்ளன. இதில் கை துடைக்கும் டிஷ்யூ பேப்பரும் அடக்கம்.
மார்ச் 2016-ல் 58 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட சமையல் எண்ணெய் ரூ.72,034-க்கும் அதாவது (1 லி. ரூ.1241), டாட்டா உப்பு 150 பாக்கெட்டுகளை ரூ.2,670க்கும் அதாவது (1 பாக்கெட்டின் விலை ரூ.49, உண்மையான விலை ரூ.15) வாங்கியுள்ளனர்.அதேபோல, தண்ணீர் பாட்டில்கள் மற்றும் குளிர்பானங்கள் ஒரு பாட்டிலுக்கு ரூ.59 என்ற வீதம் வாங்கப்பட்டுள்ளன.
ரயில்வே அறிக்கையில், ரயில் உணவகங்கள் மற்றும் கடைகள் நஷ்டத்தில் இயங்குவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் ஆர்டிஐ மூலம் உண்மையான நிலையும், நஷ்டத்துக்கான காரணமும் தெரிய வந்துள்ளது” என்கிறார் சமூக ஆர்வலர் அஜய் போஸ்.
இதுகுறித்து, விளக்கம் அளித்த ரயில்வே கோட்ட மேலாளர் ரவிந்திர கோயல், ”இது தட்டச்சுப் பிழையாக தான் இருக்க வேண்டும். இதுகுறித்து விசாரணை நடத்தப்படும் ” என்றார்.
விலை உயர்வு குறித்து பெயர் குறிப்பிட விரும்பாத மூத்த ரயில்வே அதிகாரி ஒருவர் பேசும்போது, ”இது ஆவணங்களில் மட்டும் ஏற்பட்ட பிழை இல்லை, ரயில்வே நஷ்டத்தில் இயங்குவதற்கு இத்தகைய ஊழல்களே காரணம். இத்தகைய சம்பவங்கள் உரிய முறையில், விசாரிக்கப்பட வேண்டும். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தண்டிக்கப்பட வேண்டும்” என்றார்.
ஒரு கிலோ எண்ணெய் ரூ.1241, 100 கிராம் தயிர் ரூ.972 – அடப்பாவிங்களா? அம்பலமான ரயில்வே ஊழல் !
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
May 03, 2017
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
May 03, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.