May 2, 2017
ஒரு வீரருக்கு பதில், 10 எதிரியின் தலையை எடுப்போம் என்றது வெற்று சவடாலா? ராணுவ வீரர் தாய் கொதிப்பு
ஒரு இந்திய வீரரின் இழப்பிற்கு 10 எதிரி நாட்டு ராணுவ வீரர்களின் தலைகளை எடுப்போம் என்று மத்திய அரசு கூறியது வெறும் வாய்ச் சவடால்தானா என்று கொந்தளிக்கிறார்கள் பாதிக்கப்பட்ட ராணுவ வீரர்களின்குடும்பத்தினர்
எல்லையில் சண்டையில் மடியும் ஒரு இந்திய வீரரின் தலைக்கு எதிரிகளின் 10 தலையை எடுப்போம் என்ற பாஜக தலைமையிலான மத்திய அரசின் வாக்குறுதி என்ன ஆயிற்று என்று பாதிக்கப்பட்ட தாய் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளது ராணுவ வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஷ்மீரில் பாகிஸ்தான் நடத்திய ராக்கெட் தாக்குதலில் இந்திய ராணுவ அதிகாரி உள்பட 2 வீரர்கள் கொல்லப்பட்டனர். மேலும், அவர்களது தலையை பாகிஸ்தான் ராணுவத்தினர் துண்டித்து வெறியாட்டத்தில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.இது இந்திய ராணுவத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதே போல, கடந்த 2013-ம் ஆண்டு எல்லையில் இந்திய வீரர் லாஞ்ச் நாயக் ஹேம்ராஜ் உடல் பாகிஸ்தான் ராணுவத்தால் சிதைக்கப்பட்டது. மீண்டும் காட்டுமிராண்டித்தனமாக பாகிஸ்தான் ராணுவம் நடந்துள்ளதைக் கேள்விப்பட்டு கொதித்துப் போயுள்ளார் 'லேன்ஸ் நாயக்' ஹேம்ராஜின் தாயார்.
இது குறித்து அவர் பேசுகையில் "அவர்கள் என்னுடைய மகனின் தலையை துண்டித்தார்கள். இப்போது மீண்டும் அது போன்ற சம்பவங்கள் நடப்பதை பார்த்து வருகிறோம். நம்முடைய வீரர்களின் ஒரு தலையைத் துண்டித்தால் எதிரியின் 10 தலையைக் கொண்டு வருவோம் என மத்திய அரசு வாக்குறுதி அளித்தது.ஆனால் இப்போதுவரையில் ஒரு நடவடிக்கையும் கிடையாது. பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா இப்போது கடும் நடவடிக்கையை எடுக்கவேண்டும்," என்றார்.
அதே போல ஹேம்ராஜ் சகோதரர் கூறுகையில், "நம்முடைய ராணுவ வீரர்கள் உயிரிழக்கும் வலியும், மத்திய அரசு நடவடிக்கை எடுக்காததும் மிகவும் மோசமான நிலையே. இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க அரசு கடும் நடவடிக்கையை எடுக்கவேண்டும்," என்று தெரிவித்துள்ளார்
ஒரு வீரருக்கு பதில், 10 எதிரியின் தலையை எடுப்போம் என்றது வெற்று சவடாலா? ராணுவ வீரர் தாய் கொதிப்பு
Reviewed by மறத்தமிழன்
on
May 02, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
May 02, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.