May 19, 2017
10ம் வகுப்பில் அரசுப் பள்ளிகளில் தேர்ச்சி : கன்னியாகுமரி மாவட்டம் முதலிடம் பெற்று சாதனை !
10 லட்சத்து 38 ஆயிரம் பேர் எழுதிய எஸ்.எஸ்.எல்.சி தேர்வு முடிவு இன்று காலை 10 மணிக்கு வெளியானது.
தமிழகத்தில் மார்ச் 8ந் தேதி முதல் 30ந் தேதி வரை 10ம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெற்றது. இந்த ஆண்டு முதல் பொதுத் தேர்வு முடிவு வெளியிடுவதில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. அதன்படி. மாணவர்களின் ரேங்க் பட்டியல் மற்றும் மாவட்ட வாரியான மதிப்பெண் பட்டியல்கள் வெளியிடப்படாமல், மாணவ மாணவியர்களுக்கு கிரேடு முறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தேர்வு முடிவின்படி அரசுப் பள்ளிகள் 91.59 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. தனியார் பள்ளிகள் 98.54 சதவீதம் பெற்றுள்ளது.
தமிழகத்தில் அரசு பள்ளிகளின் செயல்பாடு கன்னியாகுமரியில் சிறப்பாக உள்ளது. தமிழக மாவட்டங்களில் அதிக அளவில் தேர்ச்சி பெற்று கன்னியாகுமரி மாவட்டம் முதல் இடத்தைப் பெற்றுள்ளது. தேர்வு முடிவுகள் அனைத்தும் மாணவ மாணவிகளுக்கு செல்போன் எண்களுக்கு எஸ்.எம்.எஸ் மூலம் அனுப்பப்பட்டுள்ளன.
10ம் வகுப்பில் அரசுப் பள்ளிகளில் தேர்ச்சி : கன்னியாகுமரி மாவட்டம் முதலிடம் பெற்று சாதனை !
Reviewed by Admin
on
May 19, 2017
Rating: 5
Reviewed by Admin
on
May 19, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.