May 19, 2017
வெளியானது 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள்.. 94.4 சதவிகித மாணவர்கள் தேர்ச்சி
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு கடந்த மார்ச் மாதம் நடந்து முடிந்தது. இத்தேர்வை 11 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினார்கள். தேர்வு முடிவு இன்று காலை 10மணிக்கு வெளியிடப்படும் என்று அரசு சார்பில் முன்கூட்டியே அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே அறிவித்தப்படி 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு வெளியானது.
இதன்படி, 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு அந்தந்த பள்ளிகளில் வெளியிடப்பட்டது. அரசின் இணைய தளங்களில் வெளியிடுவதோடு மாணவ-மாணவிகளின் செல்போன்கள் வழியாகவும் தெரிவிக்கப்பட்டது.
வழக்கம் போல மாணவிகள் அதிக தேர்வு பெற்றுள்ளனர். மொத்தம் 94.4 சதவிகித மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் 96.2 சதவீதம் தேர்ச்சி பெற்ற நிலையில், மாணவர்கள் தேர்ச்சி 92.5 சதவீதமாக உள்ளது
தேர்விற்காக பள்ளிகள் மூலமாக பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்களுக்கு முடிவு தெரிவிக்கப்படும். மறுகூட்டல், மறுமதிப்பீடு செய்வதற்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.
வெளியானது 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள்.. 94.4 சதவிகித மாணவர்கள் தேர்ச்சி
Reviewed by Admin
on
May 19, 2017
Rating: 5
Reviewed by Admin
on
May 19, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.