April 16, 2017
சர்ச்சை கருத்தால் சரிந்தது ஸ்னாப்சாட் ரேட்டிங்!
ஸ்னாப்சாட்டின் மதிப்பீடு 5 ஸ்டாரில் இருந்து ஒரு ஸ்டாருக்கு சரிந்துள்ளது.அதன் சி.இ.ஓ இவான் ஸ்பீகல்லின் சர்ச்சைக்குரிய கருத்தால் இச்சரிவு ஏற்பட்டுள்ளது.
ஸ்னாப்சாட் நிறுவனத்தின் சி.இ.ஓ. இவான் ஸ்பீகல்,' ஸ்னாப்சாட் பணக்காரர்களுக்கான ஆப். அதை இந்தியா, ஸ்பெயின் போன்ற நாடுகளுக்கு விரிவுபடுத்தும் திட்டம் இல்லை' என கூறியுள்ளதாக தகவல் வெளியானது. ஸ்னாப்சாட் முன்னாள் ஊழியர் ஆண்டனி 2015-ம் ஆண்டு ஸ்னாப்சாட் வளர்ச்சிக் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளார். அந்த கூட்டத்தில் தான் ஸ்பீகல் இக்கருத்தை கூறியதாக அவர் தெரிவித்துள்ளார். இதையடுத்து நெட்டிசன்கள் ஸ்னாப்சாட்டை வறுத்தெடுக்க தொடங்கினர். இந்தியா ஏழை நாடு இல்லை, குட் பை ஸ்னாப்சாட் என விதவிதமான டேக்கில் ஸ்னாப்சாட்டை ட்ரெண்ட் செய்தனர்.
இந்நிலையில் ஸ்னாப்சாட்டின் மதிப்பீடுகள் வெகுவாக குறைந்துள்ளது. ஆப் ஸ்டோரில் ஐந்து நட்சத்திரங்களை பெற்றிருந்த ஸ்னாப்சாட் ஒரே நாளில் ஒரு நட்சத்திரத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. கூகுள் பிளே ஸ்டோரிலும் இதன் ரேட்டிங் சரிய தொடங்கியுள்ளது. மேலும், பலர் ஸ்னாப்சாட் கருத்து பெட்டியில் ஸ்பீகலின் கருத்துக்கு எதிரான கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இதனிடையே ஸ்னாப்சாட் நிறுவனத்தின் தரப்பில் 'இது ஒரு பொருத்தமற்ற குற்றசாட்டு, ஸ்னாப்சாட் உலகத்தில் இருக்கு எல்லோருக்குமானது' என கூறப்பட்டுள்ளது.
சர்ச்சை கருத்தால் சரிந்தது ஸ்னாப்சாட் ரேட்டிங்!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
April 16, 2017
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
April 16, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.