இரட்டை இலை சின்னத்தை பெற்று தருவதாக டிடிவி தினகரனிடம் கோடிக்கணக்கில் பேரம் பேசிய சுகேஷ் சந்திரா மோசடி மன்னனாக வலம் வந்தது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
அதிமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரனிடம் இரட்டை இலை சின்னத்தை திரும்ப பெற்று தருவதாக பேரம் பேசிய புகாரில் சுகேஷ் சந்திரா என்னும் இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர் மீது ஏற்கனவே ஏராளமான மோசடி வழக்குகள் உள்ளன. சுகேஷ் ஏற்கனவே பிரபல நடிகை லீனா மரியாவுடன் சேர்ந்து பண மோசடி வழக்கில் குற்றம்சாட்டபட்டவர் ஆவார்.

அரசியல்வாதி மகன், ஐஏஎஸ், ஐபிஎஸ் என பல வேடங்களில் இவர் மோசடி செய்துள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதியின் பேரன் என கூறி தமிழக அரசுக்கு சொந்தமான கார்களை குறைந்த விலைக்கு வாங்கி தரும் மோசடியிலும் இவர் ஈடுபட்டுள்ளார்.
போலி ஆவணங்களை கொடுத்து கடன் பெற முயன்ற வழக்கும் சுகேஷ் மீது உள்ளது.
மு.க அழகிரி மகன் என கூறி ஆள்மாறாட்டம் செய்த வழக்கு, அமைச்சர்கள் போல சைரன் வைத்த வண்டியை உபயோகப்படுத்திய வழக்கு என இவர் மீதான வழக்குகள் நீள்கின்றன.
சுகேஷ் சந்திரா மீது இந்தியாவில் பல மாநிலங்களில் உள்ள காவல் நிலையத்தில் 50க்கும் மேற்ப்பட்ட மோசடி வழக்குகள் உள்ளன

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.