April 16, 2017
விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னையில் வலுக்கும் போராட்டம்.. வள்ளுவர் கோட்டத்தில் இளைஞர்கள் உண்ணாவிரதம்!
சென்னையில் விவசாயிகளில் போராட்டத்துக்கு ஆதரவாக வள்ளுவர் கோட்டத்தில் ஐ.டி ஊழியர்கள், மாணவர்கள், இளைஞர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உழவர்களின் போராட்டத்தை கண்டுக்கொள்ளவில்லை என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னை ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தி வருகிறார்.
டெல்லி ஜந்தர்மந்தரில் கடந்த கடந்த மார்ச் மாதம் 14-ம் தேதி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில், அச்சங்கத்தின் தலைவர் அய்யாகண்ணு தலைமையில் காலவரையற்ற போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. காவிரி மேலாண்மை அமைப்பு, பயிர்கடன் தள்ளுபடி, நதிகள் இணைப்பு, வறட்சி நிவாரணம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வித்தியாசமான போராட்டங்களில் விவசாயிகள் ஈடுப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் 34-வது நாளான இன்று, தமிழக விவசாயிகள் வளையல் அணிந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். டெல்லியில் போராடி வரும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னையில் ஆங்காங்கே போராட்டங்கள் வலுத்து வருகின்றன. இன்று காலை வள்ளுவர் கோட்டத்தில் ஐ.டி ஊழியர்கள், கல்லூரி மாணவர்கள் இணைந்து உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.
விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னையில் வலுக்கும் போராட்டம்.. வள்ளுவர் கோட்டத்தில் இளைஞர்கள் உண்ணாவிரதம்!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
April 16, 2017
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
April 16, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.