Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 29, 2017

அடுத்தவர் குடும்பத்தை கெடுத்த வாணி ராணி சீரியல் நடிகை... இப்போ நிஜமாவே................


கள்ளக்காதல் கதையும், குடும்பத்தை கெடுத்து கணவன் மனைவியை பிரிக்கும் வாணி ராணி சீரியல் கதைகள் நிஜமாகவே அரங்கேறி டிஆர்பியை எகிற வைக்கிறது.

வாணி ராணி டிவி சீரியலில் கள்ளக்காதல் கதை, அடுத்தவர் குடும்பத்தை கெடுப்பது எப்படி, கணவன் மனைவி இடையே சண்டை மூட்டி விட்டு பிரிப்பது எப்படி என்றே எபிசோடுகள் எடுக்கப்படுகின்றன. இப்போது அந்த சீரியல் போன்றே நிஜத்திலும் இப்போது கள்ளக்காதல் அரங்கேறி நடுவீதியில் சண்டை அரங்கேறியுள்ளதால் டிஆர்பி எகிறியுள்ளது.

டிவி சீரியல்களில் அதிகம் முகம் வரவேண்டுமா? அதிக எபிசோடுகளில் தலை காட்ட வேண்டுமா? இயக்குநர்களையோ, மேனேஜர்களையோ அட்ஜஸ்ட் செய்ய வேண்டும் என்பது எழுதப்படாத விதி. அப்படி அட்ஜஸ்ட் செய்யாதவர்களின் படத்திற்கு மாலை போட்டு விடுவார்கள். இல்லையா இவருக்கு பதில் இவர் என்று ஆளையே மாற்றி விடுவார்கள்.

சின்னத்திரையில் பிரபலமாக இருக்கும் நடிகைகளுக்கு இந்த சிக்கல் இல்லை. ஆனால் வளர்ந்து வரும் நடிகைகள் படும் துயரத்தைக் கேட்டால் 5000 எபிசோடுகளுக்கு அதிகமான மிக நீண்ட சீரியலே எடுக்கலாம்.

 சின்னத்திரை சீரியல்
பிரபல நடிகை தயாரித்து நடிக்கும் சீரியல் வாணி ராணி. பிரபல தொலைக்காட்சியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகிறது. இந்த சீரியலில் சமீபகாலமாக 50 எபிசோடுக்கு மேல் ஒரு பெண் அடிக்கடி வரும் காட்சிகள் இடம் பெற்றன. இந்த சீரியலில் சபீதா ராய் முதலில் ஒரு எபிசோடில் மட்டுமே தலை காட்டினார். இப்போது அதிகம் எபிசோடுகளில் தலை காட்டி வருகிறார். இவர் கககபோ படத்தில் நடித்திருக்கிறார்.

 குடும்பத்தை கெடுப்பது
சீரியலில் புதிதாக திருமணமான தம்பதியை பிரிப்பதுதான் அந்த நடிகைக்கு கொடுத்த அசைன்மெண்ட். வாடகைக் கார் நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்து இளம் பெண்ணின் நெஞ்சில் நஞ்சை கலந்து அமைதியான பெண்ணில் மனதை புயலை வீச வைத்து விட்டு இப்போது வெளியேறி விட்டார் சபீதா ராய். இப்போது நல்ல பிள்ளை போல உங்கள் கணவர் அப்படியில்லை என்று கூறினால் அதைக் கேட்டு மீண்டும் கணவனுடன் சேர்ந்து வாழ்ந்து விடுவாளா என்ன?

 எகிறும் டிஆர்பி
எந்த சம்பந்தமும் இல்லாமல் ஏன் அந்த நடிகைக்கு இத்தனை முக்கியத்துவம் தந்தனர் என்பது இப்போது நள்ளிரவு சண்டை காட்சிகள் ஊடகங்களில் சந்தி சிரித்த பின்னரே தெரிகிறது. வீட்டில் மனைவி இல்லாத நேரத்தில் பணம் கொடுக்கல் வாங்கல் என்று கூறி சபீதாராயை வரவழைத்து அவளை ஏமாற்றியதாலேயே இப்போது விசயம் வீதிக்கு வந்துள்ளது.

சீரியலை விட நிஜம் கொடூரம்
சீரியலில் கணவன் மனைவியை பிரிக்கும் கதாபாத்திரத்தில் நடித்த அந்த நடிகைக்கு இப்போது நிஜத்தில் மனைவி இல்லாத நேரத்தில் தனியாக வீட்டில் இருக்கும் ஆணை சந்திக்க போகலாமா என்ற யோசனை கூடவா இருக்காது?. போவானேன் பிறகு முடியை பிடித்து இழுத்து அடி வாங்குவானேன். இந்த சபீதா ராய் மட்டுமல்ல சின்னத்திரையில் பல நடிகைகளின் வாழ்க்கையும் இப்படி சோக கீதம் பாடுவதாகவே உள்ளது என்கின்றனர் சின்னத்திரையால் பாதிக்கப்பட்டு ஆளை விடுங்கடா என்று விலகியவர்கள்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.