April 18, 2017
வைரலாகும் இந்தியாவின் முதல் கண்ணாடி ரயில் பெட்டி!
சுற்றிலும் கண்ணாடி பொறுத்தப்பட்டுள்ள 'Vistadome Coaches' என்னும் ரயில் பெட்டியை இந்திய ரயில்வே கடந்த 16-ம் தேதி அறிமுகப்படுத்தியது. இந்தியாவில் முதல்முறையாக இது போன்ற கண்ணாடி ரயில் பெட்டி உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த கண்ணாடி ரயில் பெட்டி, விசாகப்பட்டினம்-கிரண்டூர் பயணிகள் ரயிலில் இணைக்கப்பட்டுள்ளது. இதனை கொடியசைத்து துவக்கி வைத்த ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு, புகைப்படங்களை ட்விட்டரில் பகிர்ந்தார். பிரமாண்டமாக இருக்கும் இந்த கண்ணாடி ரயில் பெட்டி சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது
இந்த ரயில் பெட்டியில் கண்ணாடி மேற்கூரை, குளிர்சாதன வசதி, 360 டிகிரி அளவுக்கு சுற்றும் 40 இருக்கைகள், ஜி.பி.எஸ், தானியங்கி கதவுகள் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன. விசாகப்பட்டினம்-கிரண்டூர் ரயில் பாதையில், அரக்கு மலைப்பகுதி அமைந்துள்ளது. இந்த கண்ணாடி பெட்டியில் பயணிப்போர், அரக்கு மலைப்பகுதியின் அழகை ரயிலில் அமர்ந்தவாரே கண்டு ரசிக்க முடியும். இந்த பெட்டியை தயாரிக்க சுமார் 3.38 கோடி ரூபாய் செலவாகியுள்ளது.
இது போன்ற கண்ணாடி ரயில் பெட்டிகள் சுற்றுலாத் தளங்களை இணைக்கக் கூடிய ரயில்களில் இணைக்க ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
வைரலாகும் இந்தியாவின் முதல் கண்ணாடி ரயில் பெட்டி!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
April 18, 2017
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
April 18, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)



No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.