April 17, 2017
பாடநுால் வாரியம் எல்லாம் பத்தாது..! நான் பன்னீர் அணிக்கு பாய்கிறேன்..! ஓ.பி.எஸ்., அணிக்கு தாவுகிறார்
முன்னாள் அமைச்சர் வளர்மதி, தமிழக அரசின் பாட நுால் வாரிய தலைவராக உள்ளார்.
சசிகலாவின் தீவிர ஆதரவாளராக செயல்பட்டு வந்தார். அதற்காக, அவருக்கு தமிழக அரசின் பாடநுால் வாரியத் தலைவர் பதவி வழங்கப்பட்டது.
சசிகலா சிறைக்கு சென்ற பின், தினகரன் ஆதரவாளராக வலம் வந்தார். ஆர்.கே.நகர் தொகுதியில், தினகரனுக்கு ஆதரவாக, தேர்தல் பிரசாரம் செய்தார்.
மாநில பேச்சாளர்கள், செய்தி தொடர்பாளர்களின் தேர்தல் பிரசார பயண விவகாரத்தில், வளர்மதி மீது புகார்கள் எழுந்தன.
இதுகுறித்து, அவரிடம், தினகரன் விசாரணை நடத்தினார். இதனால், அதிருப்தி அடைந்த வளர்மதி, தேர்தல் ரத்துக்கு மறுநாள், கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு வராமல் புறக்கணித்தார்.
ஏற்கனவே, வளர்மதி மீது ஏற்பட்ட மோதலால், செய்தி தொடர்பாளர் நிர்மலா பெரியசாமி, பன்னீர்செல்வம் அணியில் இணைந்தார்.
இந்நிலையில், தற்போது சசிகலா அணியை விட்டு ஒதுங்கி உள்ள வளர்மதியும், பன்னீர்செல்வம் அணியில், ஐக்கியமாக உள்ளார்
பாடநுால் வாரியம் எல்லாம் பத்தாது..! நான் பன்னீர் அணிக்கு பாய்கிறேன்..! ஓ.பி.எஸ்., அணிக்கு தாவுகிறார்
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
April 17, 2017
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
April 17, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.