தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், திராவிட கட்சிகள் 50 ஆண்டு ஆட்சி செய்து என்ன செய்தது என்று, நேற்று கடுமையாக விமர்சித்திருந்தார்.
இந்நிலையில் இன்று தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன், தமிழிசையின் திராவிட கட்சிகள் மீதான விமர்சனத்துக்கு, தன்னுடைய பாணியில் நக்கலாக பதிலளித்தார்.
அப்போது அவர் கூறும்போது, பாஜக தலைவர் தமிழிசை அரசியலில் இன்னமும் கத்துக்குட்டி தான். அவர் எல்கேஜி தான் படித்துக்கொண்டிருக்கிறார் என்று கிண்டலடித்தார்.
மேலும் திமுகவின் ஆட்சி காலத்தில் விவசாயிகளுக்காக செயல்படுத்தப்பட்ட பல்வேறு திட்டங்களையும், தமிழகத்தில் கட்டப்பட்ட 36 அணைகளை பட்டியலிட்டார்.
இது தவிர, கருணாநிதியின் ஆட்சி காலத்தில் விவசாயிகளின் பயிர் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது என்றும், காவிரி ஆற்றை முதன் முதலில் தூர் வாரியது திமுக தான் எனறும் கூறினார்.
ஆனால் இவையெல்லாம் தெரியாத தமிழிசை, திமுகவை பற்றி விமர்சித்து பேசுகிறார். பாவம் அவரை விட்டுவிடுங்கள் என்று சிரித்துக் கொண்டே துரைமுருகன் பேசினார்.


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.