Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 20, 2017

ஜெ.வும் சசியும் அப்பல்லோவில் பேசிய வீடியோ ரிலீஸ் செய்யனுமா? திவாகரன் மகன் திடுக் தகவல்


அப்பல்லோவில் ஜெயலலிதாவும் சசிகலாவும் உரையாடிய வீடியோ காட்சி இருப்பதாக திவாகரன் மகன் ஜெயானந்த் திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார்.

அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதாவுடன் சசிகலா பேசிய வீடியோ காட்சிகள் இருப்பதாகவும் அதை ரிலீஸ் செய்தால் பல உண்மைகள் வெளிவரும் என்றும் சசிகலாவின் சகோதரர் திவாகரன் மகன் ஜெயானந்த் திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார்.

ஜெயலலிதாவின் மர்ம மரணத்துக்கு விடை தேடுகிறது தமிழகம். ஜெயலலிதா தாக்கப்பட்டு மருத்துவமனையில் இறந்தாரா என்பது தொடங்கி அவருக்கு மாரடைப்பு ஏற்பட காரணமாக இருந்த பழச்சாறு வரைக்கும் விசாரிக்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கை தொடருகிறது.

அப்பல்லோ மருத்துவமனையில் நடந்தது என்ன என்பது பற்றிய வீடியோ காட்சிகளை வெளியிட வேண்டும் என்ற கோரிக்கை நிராகரிக்கப்பட்டு வருகிறது. அவ்வளவு பெரிய மருத்துவமனையில் சிசிடிவி காமிராவே இல்லை என்பது நம்ப முடியாத ஒன்றாகத்தான் மக்கள் பார்த்து வருகின்றனர்.

இந்த நிலையில் சசிகலாவின் சகோதரர் திவாகரனின் மகன் ஜெயானந்த் அண்மையில் தம்முடைய ஃபேஸ்புக் பக்கத்தில், ஜெயலலிதாவும் சசிகலாவும் மருத்துவமனையில் உரையாடிய வீடியோ காட்சிகள் வெளிவந்தால்... அந்த நாள் மிக விரைவில் என பதிவிட்டுள்ளார். ஜெயானந்த் பேஸ்புக் பதிவில் கூறியுள்ளதாவது:
கொலை பழி சுமத்தியும் அம்மா அவர்களின் சிகிச்சை படத்தை வெளியிட வில்லை...

காரணம் பச்சை கவுன் உடையில் அம்மா அவர்களின் எதிரிகள்
அதை பார்க்க கூடாது என்பதே ஒரே காரணம்
இது தியாகத்தலைவி சின்னம்மாவின் செயல்...
சிங்கத்தை நாங்கள் சிங்கமாகவே

பூ உலகை ஆளுவதற்க்கு ராஜ மரியாதையுடன் அனுப்பி வைத்தோம்
ஆனால் ஓ.பி.எஸ் கேவலம் ஓட்டுக்காக புரட்சித்தலைவி அம்மா அவர்களை பிணப் பெட்டியில் வைத்து தற்போது ஓட்டு கேட்கிறார்
உண்மை வலிமையானது ஒருநாள் புரட்சித் தலைவி அம்மா அவர்களும்,தியாக

தலைவி சின்னம்மா இருவரும்
மருத்துவமனையில் உரையாடல்கள் வீடியோ வெளிவந்தால்...?
P.H.பாண்டியன்,
மனோஜ்பாண்டியன்,
ஓ.பன்னீர்செல்வம் இவர்களை என்ன செய்யலாம்...?
அந்த நாள் மிக விரைவில்..
..
இவ்வாறு ஜெயானந்த் அப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
ஜெயானந்த் பதிவிட்டுள்ளதன் அடிப்படையில் அப்பல்லோ ரகசிய வீடியோக்கள் ஏராளமாக பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகவே தெரிகிறது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.