April 18, 2017
காஷ்மீரில் கலவரத்தைக் கட்டுப்படுத்த பிளாஸ்டிக் புல்லட்...
காஷ்மீர் மாநிலத்தில் பல்வேறு காரணங்களால் மறுபடியும் உள்நாட்டுக் கலவரம் அதிகரித்துள்ளது. கலவரத்தில் ஈடுபடும் மக்களை கலைக்க பாதுகாப்புப் படையினரால் தற்போது 'பிளாஸ்டிக் குண்டுகள்' பொருத்தப்பட்ட துப்பாக்கிகள் பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்ற ஆண்டு அங்கு நடைபெற்ற கலவரங்களின்போது, பாதுகாப்பு படை வீரர்கள் 'பெல்லட்' வகை குண்டுகளை பயன்படுத்தினர். இது உயிரை எடுக்காது ஆயினும், தாக்கப்படுபவர்களின் முகம் மற்றும் கண்களுக்கு பலத்த சேதம் விளைவிப்பதாக விமர்சனங்கள் எழுந்தன.
இந்தப் புகார் எதிரொலிதான், தற்போது பிளாஸ்டிக் குண்டுகள் பயன்படுத்தும் நடவடிக்கைக்கு உள்துறை அமைச்சகம் வந்துள்ளதாம்.
காஷ்மீர் பகுதியில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருவதால், அங்கு சமீபத்தில் நடைபெற்ற ஶ்ரீநகர் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் 7 சதவிகித வாக்கு மட்டுமே பதிவாகியது குறிப்பிடத்தக்கது.
காஷ்மீரில் கலவரத்தைக் கட்டுப்படுத்த பிளாஸ்டிக் புல்லட்...
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
April 18, 2017
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
April 18, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.