April 20, 2017
'பனாமா பேப்பர்ஸ்' ஊழல் வழக்கில் நவாஸ் ஷரீஃபுக்கு இன்று தீர்ப்பு!
பனாமா பேப்பர்ஸ் ஊழல் வழக்கில், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷரீஃப் மற்றும் அவரது மகன்களுக்கு இன்று பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது.
பனாமா கேட் ஊழல் வழக்கில் தொடர்புடையாதாகக் கூறப்படும் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷரீஃப் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிரான வழக்கில், இன்று தீர்ப்பு வழங்க உள்ளது, இது பாகிஸ்தான் அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது.
உலகில் உள்ள பல முக்கியப் பிரமுகர்கள், ஊழல்செய்து சேர்த்த கறுப்புப் பணத்தைப் பாதுக்காக்க, மத்திய அமெரிக்க நாடான பனாமாவில் முதலீடுசெய்து வருவதாக, பனாமா லீக்ஸ் ஒரு பரபரப்பான செய்தியை வெளியிட்டது. உலகத்தையே பரபரக்கச்செய்த ஊழல் வெளியீட்டுப் பட்டியலில், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷரீஃப் பெயரும் சிக்கியுள்ளது.
நவாஸ் ஷரீஃப் மட்டுமல்லாமல், அவரது மகன்களும் இந்த ஊழல் வழக்கில் உள்ளதால், அவர்கள் மீது பாகிஸ்தான் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணைகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்படுமென பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் நேற்று அறிவித்தது.
பாகிஸ்தானில், அடுத்த ஆண்டு பொதுத்தேர்தல் நடக்க உள்ள நிலையில், நவாஸ் மற்றும் அவரின் குடும்பத்தாரின் மீது வெளியாக இருக்கும் ஊழல் வழக்கின் தீர்ப்பு, தீவிர தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
'பனாமா பேப்பர்ஸ்' ஊழல் வழக்கில் நவாஸ் ஷரீஃபுக்கு இன்று தீர்ப்பு!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
April 20, 2017
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
April 20, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.