புதுக்கோட்டை : ஹைட்ரொ கார்பன் திட்டத்திற்கு எதிராக நெடுவாசல் கிராம மக்கள் மீண்டும் போராட்டத்தில் குதித்துள்ளனர். ஹைட்ரொ கார்பன் எடுக்கும் திட்டம் தொடர்பாக கடந்த 27ம் தேதி தனியார் நிறுவனங்களுடன் மத்திய அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த நெடுவாசல் கிராம மக்கள், ஹைட்ரொ கார்பன் திட்டத்திற்கு எதிராக மீண்டும் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். வாக்குறுதியை மீறி மத்திய மாநில அரசுகள் நம்பிக்கை துரோகம் செய்ததே போராட்டத்தை கையில் மீண்டும் எடுக்க காரணம் என்று நெடுவாசல் மக்கள் குமறியுள்ளனர்.
காவல் துறையினரின் அனுமதியை மீறி ஏராளமான பெண்களும், இளைஞர்களும் போராட்டத்தில் குதித்திருப்பது நெடுவாசல் கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் உள்ளிட்ட 31 இடங்களில் ஹைட்ரொ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு மத்திய அரசு கடந்த பிப்ரவரி மாதம் ஒப்புதல் அளித்தது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து நெடுவாசல் கிராமத்தை மையமாக வைத்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. மத்திய மாநில அரசுகள் அளித்த உறுதியை ஏற்று 22 நாள் போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி கொள்வதாக நெடுவாசல் மக்கள் அறிவித்திருந்து குறிப்பிடத்தக்கது.


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.