April 27, 2017
பெண்களை இழிவாகப் பேசிய கேரள அமைச்சர் எம்.எம்.மணிக்கு எதிராக நடிகை நக்மா போர்க்கொடி
தமிழக பெண்கள் பற்றி இழிவாகப் பேசிய கேரள அமைச்சர் எம்.எம்.மணிக்கு, நடிகை நக்மா கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை: தமிழக பெண்கள் குறித்து கேரள அமைச்சர் எம்.எம். மணியை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் நடிகை நக்மா கூறியுள்ளார்.
கேரள மின்சாரத்துறை அமைச்சர் எம்.எம் மணி, மூணாறில் நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் பேசும் போது தமிழக பெண்கள் குறித்து அவதூறாகவும் இழிவாகவும் பேசினார் என அவர் மீது எதிர்கட்டிகள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
மரணமடைந்த முன்னாள் மத்திய அமைச்சர்.... குடும்பத்தினர் பார்க்க..
இந்நிலையில் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் நடிகை நக்மா சென்னை வந்துள்ளார். அவர் தமிழக காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், விவசாயிகள் பிரச்சினைக்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்காமல் மாநில அரசை கைகாட்டுவது தவறு என குற்றம் சாட்டினார்.
மேலும் தினகரன் கைது விவகாரத்தில் உண்மை வெளி கொண்டு வர வேண்டும். தேசிய நெடுஞ்சாலைகளில் மூடப்பட்ட டாஸ்மாக் கடையை திறக்கக்கூடாது. தமிழ்ப் பெண்களை இழிவாகப் பேசிய கேரள அமைச்சர் எம்.எம்.மணியை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றார்.
பெண்களை இழிவாகப் பேசிய கேரள அமைச்சர் எம்.எம்.மணிக்கு எதிராக நடிகை நக்மா போர்க்கொடி
Reviewed by மறத்தமிழன்
on
April 27, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
April 27, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.