Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 22, 2017

துளி துளியாய் விளையாட்டு


* இடது கை தோள்பட்டை காயத்தால் அவதிப்பட்டு வரும் தொடக்க வீரர் லோகேஷ் ராகுல், லண்டனில் ஜூன் மாதம் நடக்க உள்ள ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி ஒருநாள் போட்டித் தொடரில் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் அறுவை சிகிச்சை செய்துகொண்டுள்ள அவர் 3 மாதம் ஓய்வெடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

* ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கியதால் தடை விதிக்கப்பட்ட ரஷ்ய டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவாவுக்கு, பிரெஞ்ச் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரில் விளையாட ‘வைல்டு கார்டு’ சிறப்பு அனுமதி கிடைக்குமா என்பது மே 15ம் தேதி தெரியும் என்று ரோலண்ட் கேரோஸ் நிர்வாகம் கூறியுள்ளது. வைல்டு கார்டு வழங்கப்படாவிட்டால் அவர் தகுதிச் சுற்றில் களமிறங்க வேண்டியிருக்கும்.

* சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ள பாக். ஆல் ரவுண்டர் ஷாகித் அப்ரிடி, தனக்கு நினைவுப்பரிசு கொடுத்து வாழ்த்திய இந்திய அணி கேப்டன் கோஹ்லி மற்றும் வீரர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.