April 16, 2017
வங்கக் கடலில் உருவானது 'மாருதா' புயல்: கருணை காட்டுவாரா வருண பகவான்?
வங்கக் கடலில் 'மாருதா' என்ற புயல் உருவாகியுள்ளது.
அந்தமான் அருகே வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நிலை கொண்டு இருந்தது. இது நேற்று மாலை 5.30 மணிக்கு தீவிர காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறியது. இந்நிலையில், இந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், மேலும் வலுப்பெற்று இன்று நள்ளிரவு 2.30 மணி அளவில் புயலாக மாறியுள்ளது என்று, சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறுகையில், "இந்தப் புயலுக்கு 'மாருதா' என பெயரிடப்பட்டுள்ளது. இது அந்தமானில் இருந்து, மியான்மர் நோக்கி நகர்ந்து வருகிறது. வருகின்ற 17-ம் தேதி (நாளை) காலை, இந்தப் புயல் கரையைக் கடக்கும். இதனால், தமிழகத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை. தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவும். ஓரிரு பகுதிகளில், இன்று இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது" என்றனர்.
வங்கக் கடலில் உருவானது 'மாருதா' புயல்: கருணை காட்டுவாரா வருண பகவான்?
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
April 16, 2017
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
April 16, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.