April 9, 2017
சென்னை அண்ணா சாலையில் திடீர் பள்ளத்தில் சிக்கிய பஸ்,கார் - படங்கள் இணைப்பு
சென்னை அண்ணா சாலையில் அமெரிக்க தூதரகம் அருகே சாலையில் திடீரென பள்ளம் ஏற்பட்டது. இந்த பள்ளத்தில், அண்ணா சதுக்கத்திலிருந்து வடபழனி சென்ற சென்னை மாநகர பஸ்சும், காரும் சிக்கிக்கொண்டன. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் சிலர் காயமுற்றதாக தெரிகிறது. சம்பவ இடத்தில் மீட்பு படையினர் குவிந்துள்ளனர். பஸ்சை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மெட்ரோ திட்ட பணியின் காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன் அண்ணாசாலையில் திடீர் பள்ளம் ஏற்பட்டது. இந்த பள்ளம் உடனடியாக மூடப்பட்டது. தற்போது இந்த இடத்திற்கு அருகே மீண்டும் புதிய பள்ளம் உருவாகி, அந்த பள்ளத்தில் பஸ்சும், காரும் கவிழ்ந்தது..
சென்னை அண்ணா சாலையில் திடீர் பள்ளத்தில் சிக்கிய பஸ்,கார் - படங்கள் இணைப்பு
Reviewed by மறத்தமிழன்
on
April 09, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
April 09, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)






No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.