April 4, 2017
ஏழையாக கருதி அரவிந்த் கெஜ்ரிவாலுக்காக இலவசமாக ஆஜராவேன் -ராம் ஜெத்மலானி
மத்திய மந்திரி அருண் ஜெட்லி தொடர்ந்த அவதூறு வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஆதரவாக ஆஜராகி வாதாடி வருபவர் மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி. மலானிக்கு அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பில் ரூ. 3 கோடிக்கு மேல் கட்டணம் கொடுக்க வேண்டியது உள்ளது என தகவல்கள் வெளியாகியது. கடந்த வருடம் டிசம்பர் மாதம் ராம் ஜெத்மலானிக்கு கொடுக்க வேண்டிய கட்டண தொகையை வழங்குமாறு சிசோடியா கேட்டுக் கொண்டு உள்ளார். ஆனால் டெல்லி மாநில சட்ட அமைச்சகம் டெல்லி கவர்னரின் இசைவு கிடைக்கவில்லை என்றது. இவ்விவகாரத்தில் கவர்னர் அனில் பைஜால் கூடுதல் சொலிஸ்டர் ஜெனரல் ரஞ்சித் குமாரிடம் அறிவுரை கோரிஉள்ளார்.
இதற்கிடையே அவதூறு வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்காக ஆஜரான வழக்கறிஞருக்கு கட்டணம் அரசு தரப்பில் இருந்து வழங்கப்படுவது தொடர்பாக சட்ட துறையில் கவலை எழுப்பபட்டதாகவும் தகவல்கள் வெளியாகியது. மக்களின் வரிப்பணம் கட்டணமாக வழங்கப்பட உள்ளது எனவும் செய்திகள் வெளியாகியது.
இந்நிலையில் டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலை என்னுடைய ஏழை வாடிக்கையாளராக கருதுவேன் என மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி கூறிஉள்ளார். ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலால் பீஸ் கட்டணம் செலுத்த முடியவில்லை என்றால் இலவசமாக வாதிடுவேன். அரவிந்த் கெஜ்ரிவால் அல்லது அரசு என்னுடைய கட்டணத்தை செலுத்தவில்லை என்றால் அவருக்காக இலவசமாக ஆஜராவேன். என்னுடைய ஏழை வாடிக்கையாளர்களில் ஒருவராக அவரையும் கருதுவேன்,” என்றார் ராம் ஜெத்மலானி.
“எல்லோருக்கும் தெரியும் நான் பணக்கார வாடிக்கையாளர்களிடம் மட்டுமே பீஸ் வாங்குவேன். ஏழை மக்களுக்கு இலவசமாக பணியாற்றுவேன், என்னுடைய வாடிக்கையாளர்களில் 90 சதவிதம் பேர் ஏழைகள்தான்,” என கூறிஉள்ளார் ராம் ஜெத்மலானி.
ஏழையாக கருதி அரவிந்த் கெஜ்ரிவாலுக்காக இலவசமாக ஆஜராவேன் -ராம் ஜெத்மலானி
Reviewed by மறத்தமிழன்
on
April 04, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
April 04, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.