Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 16, 2017

பெப்சி நிறுவனம் கோல்மால்! மக்களே உஷார்! தமிழில் பெயர் மாற்றி விற்பனை !!


தமிழகத்தில் நடந்த ஜல்லிக்கட்டு புரட்சியின் போது வெளிநாட்டு குளிர்பானங்களான கோக், பெப்சி நிறுவனங்களுக்கு எதிராக மாணவர்களும், இளைஞர்களும் குரல் கொடுத்தனர்.

பிரபல குளிர்பான நிறுவனமான பெப்சி தனது பெயரை தமிழில் மாற்றி விற்பனை செய்யும் ஏமாற்று வேலையைத் தொடங்கியுள்ளது.

தமிழகத்தின் தண்ணீர் வளங்களைச் உறிஞ்சி கோடிக்கணக்கில் லாபம் பார்க்கும் பன்னாட்டு குளிர்பான நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கு தற்போது கடும் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஜல்லிக்கட்டு போட்டியை மீட்டெடுக்கும் போராட்டத்தின் அங்கமாக பெப்சி, கோக் உள்ளிட்ட பன்னாட்டு குளிர்பான நிறுவனங்களின் சுரண்டலை எதிர்த்தும் இளைஞர்கள் குரல் கொடுத்தனர். இதன் எதிரொலியாக நம் தண்ணீரை எடுத்து நம்மிடமே அதிக லாபத்திற்கு விற்கும் அந்நிறுவனங்களின் குளிர்பானங்களை விற்கப்போவதில்லை என்று வணிகர் சங்கங்கள் அறிவித்தன.

இதனால், இப்போது இளநீர் மற்றும் பன்னீர் சோடாவின் விற்பனையும் அதிகரித்துள்ளது. இந்நிலையில், பெப்சி நிறுவனம் தனது தில்லாலங்கடி வேலையை காட்ட ஆரம்பித்திருக்கிறது. பெப்சி என்ற பெயரை  ‘கெத்து’ என்று தமிழில் மாற்றி விற்பனைசெய்யத் தொடங்கியுள்ளது. சூப்பர் மார்க்கெட்டுக்களில் இவை அதிகம் விற்பனைக்கு உள்ளன.

இந்த புதுப்பெயர் கொண்ட பெப்சி பாட்டில்களில் அந்நிறுவனத்தின் அடையாளம் அதிகம் தெரியாதபடி, லோகோவை கூட சிறியதாக ஓரத்தில் போட்டிருக்கிறது. பெயரை மாற்றினால் தமிழர்களை ஏமாற்றி விடலாம் என்று குறுக்குவழியில் செல்லும் பெப்சியை மக்கள் இன்னும் கடுமையாக புறக்கணிக்க வேண்டும் என்றும் அவற்றை விற்பனை செய்யும் கடைகளில் பொருட்கள் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் உடனடி எதிர்க்குரல் கொடுக்கத் ஆரம்பித்துள்ளனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.