April 16, 2017
விதியின் சதி.... இரட்டையர்கள் தம்பதிகள் ஆன சோகம்!
அமெரிக்காவில் காதலித்து திருமணம் செய்து கொண்ட தம்பதிகள், திருமணத்துக்கு பிறகு தாங்கள் இரட்டையர்கள் என்னும் தகவல் அறிந்து அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
அமெரிக்காவின் மிசிசிப்பி மாநிலத்தில் பிரபல குழந்தை மகப்பேறு மருத்துவர் ஜாக்சன் என்பவரிடம் ஒரு காதல் தம்பதி குழந்தை பேறு சிகிச்சைக்காக வந்துள்ளனர். ஜாக்சன் அவர்களுக்கு டி.என்.ஏ பரிசோதனை செய்துள்ளார். அவர்களின் டி.என்.ஏ பரிசோதனை முடிவுகள் ஜாக்சனை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. அந்த காதல் தம்பதி இரட்டையர்கள் அதாவது ஒன்றாக பிறந்தவர்கள் என்பது டி.என்.ஏ பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து Mississippi Herald என்னும் நாளிதழில் வெளியான செய்தியின் விவரங்கள் பின்வருமாறு..
மிசிசிப்பியில் 1984ம் ஆண்டு ஒரு கார் விபத்தில் கணவன் மனைவி உயிரிழந்துவிட்டார்கள். அதிர்ஷ்டவசமாக அவர்களின் இரட்டை குழந்தைகள் விபத்தில் பிழைத்து கொண்டன. அந்த இரட்டை குழந்தைகளில் ஆண் குழந்தையை ஒரு குடும்பமும், பெண் குழந்தையை மற்றொரு குடும்பமும் தத்தெடுத்து வளர்த்துள்ளனர். இருவருக்குமே தாங்கள் யார் என்பது தெரியாது. அப்படி இருக்க ஒரே கல்லூரியில் இருவரும் சேர்ந்து படிக்கும் சூழல் ஏற்படுகிறது. தாங்கள் இரட்டையர்கள், ஒரே பெற்றோருக்கு பிறந்தவர்கள் என்பது தெரியாமலேயே காதலிக்க தொடங்கிவிட்டனர். திருமணமும் முடிகிறது. திருமணத்துக்கு பிறகு அந்த பெண் கர்ப்பம் தரிக்கவில்லை என்பதால் ஜாக்சன் என்னும் மகப்பேறு மருத்துவரிடம் சிகிச்சைக்கு செல்கின்றனர். ஜாக்சன் இருவருக்கும் டி.என்.ஏ பரிசோதனை செய்து பார்த்த போது இருவரும் அவர்கள் இரட்டையர்கள் என்பது தெரிய வருகிறது. மருத்துவ முடிவை அந்த ஆண் தனது மனைவியிடம் கூறிய போது, அந்த பெண் அதனை நம்ப மறுத்துவிட்டார். இந்த வினோதமான சம்பவத்தை ஊடகங்களிடம் மருத்துவர் ஜாக்சன் தெரிவித்துள்ளார். அந்த தம்பதியின் பெயர்கள் மற்றும் புகைப்படத்தை குறிப்பிடாமல் இந்த சம்பவத்தை மட்டும் விவரித்துள்ளார் ஜாக்சன். தற்போது அந்த தம்பதியினர், இணைந்து வாழ்வதா பிரிவதா என்னும் குழப்பத்தில் இருக்கிறார்களாம்!
விதியின் சதி.... இரட்டையர்கள் தம்பதிகள் ஆன சோகம்!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
April 16, 2017
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
April 16, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.